நயன்தாரா- தனுஷ் பிரச்சனை.. முதன் முதலாக விளக்கம் கொடுத்த தனுஷின் தந்தை கஸ்தூரி ராஜா
நயன்தாரா- தனுஷ்
வலைத்தளத்தில் தற்போது மிகவும் பரபரப்பாக பேசப்படும் விஷயம் என்றால் அது நடிகை நயன்தாரா சில தினங்களுக்கு முன் தனுஷ் குறித்து வெளியிட்ட அறிக்கை தான்.
தமிழ் சினிமா துறைக்கு கடும் அதிர்ச்சி அளிக்கும் வகையில் தனுஷை குறித்து பல குற்றச் சாட்டுகளை நயன்தாரா முன் வைத்தார்.
அதாவது, தனது திருமணத்தின் ஆவண படத்தில் நானும் ரௌடி தான் படத்தின் பாடல், காட்சிகளை பயன்படுத்த அனுமதி கேட்டு இரண்டு வருடங்களாக போராடியதாகவும், அதை அவர் சொந்த வெறுப்பால் தரவில்லை என நயன்தாரா குற்றம் சாட்டி இருந்தார்.
தனுஷை தாக்கி நயன்தாரா வெளியிட்ட கடிதத்திற்கு தற்போது வரை தனுஷ் தரப்பில் இருந்து எந்த பதிலும் வரவில்லை.
கஸ்தூரி ராஜா பேட்டி
இந்நிலையில், தனுஷின் தந்தையும் பிரபல இயக்குனருமான கஸ்தூரி ராஜா இந்த பிரச்சனை குறித்து முதன் முதலில் ஊடகம் ஒன்றுக்கு விளக்கம் கொடுத்துள்ளார்.
அதில், "என் குடும்பத்தில் இருக்கும் அனைவரும் வேலை வேலை என்று நிற்பதற்கு கூட நேரம் இல்லாமல் ஓடி கொண்டிருக்கிறோம். அது போன்று தான் என் மகன் தனுஷுக்கு வேலை தான் மிகவும் முக்கியமான ஒன்று பின்னால் பேசுபவர்கள் குறித்து கவலை இல்லை.
தடையில்லா சான்றிதழ் பெற இரண்டு ஆண்டுகள் நயன்தாரா தனுஷ்க்காக காத்திருந்ததாக சொன்னது அனைத்தும் பொய். மேலும், இதுபற்றி பேச விருப்பம் இல்லை" என்று கஸ்தூரி ராஜா கூறியுள்ளார்.

நேருக்கு நேர் மோதவிருந்த விமானங்கள்: 300 அடி கீழ் நோக்கி பாய்ந்த விமானம்! திக் திக் நொடிகள்! News Lankasri

திருமணத்திற்கு முன்பே 6 மாத கர்ப்பம் - மாதம்பட்டி ரங்கராஜ் 2வது திருமணம் - பெண்ணு யார் தெரியுமா? IBC Tamilnadu

சீனாவிற்கு கடும் பின்னடைவு... ஜி ஜின்பிங்கின் திட்டத்தைக் கெடுத்த ட்ரம்பின் ஒற்றை முடிவு News Lankasri

சிவன் ஆலயத்திற்காக மோதும் நாடுகள்! மூன்றாம் உலகப்போரின் தொடக்கமா? ஓடித்திரியும் ட்ரம்ப் News Lankasri
