நடிகர் தனுஷ் கையில் வைத்து கொஞ்சும் இந்த நாய்களின் விலை மட்டும் இத்தனை லட்சமா?
நடிகர் தனுஷ் கடந்த சில மாதங்களாக வெளிநாட்டில் ஆங்கில பட படப்பிடிப்பில் இருந்தார். அதேநேரம் ஓய்வு கிடைக்கும் போதெல்லாம் தனது மனைனி, மகன்களுடன் வெளிநாட்டில் ஊர் சுற்றியும் இருந்தார்.
அந்த புகைப்படங்கள் பல சமூக வலைதளங்களில் வெளியாகி இருந்தது. படப்பிடிப்பை முடித்த தனுஷ் சென்னை திரும்பியுள்ளார். அண்மையில் யுவன் ஷங்கர் ராஜா பிறந்தநாள் கொண்டாட்டத்திலும் கலந்துகொண்டார்.
அவர் சில பாடல்களையும் யுவனுக்காக பாடியிருந்தார், அந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி இருந்தது.
தனுஷ் தனது இன்ஸ்டாவில் புதிதாக வாங்கிய இரண்டு நாய் குட்டிகளின் புகைப்படத்தை பதிவிட்டார், மிகவும் வைரலானது.
வெளிநாட்டில் இருந்து வாங்கப்பட்ட அவர் இரண்டு நாய் குட்டிகளின் விலை ரூ. 1.5 லட்சத்துக்கு மேலாக இருக்கும் என்கின்றனர்.
அதன் கண்ணிற்கே அதிக விலை என கூறப்படுகிறது.