வெற்றிநடைபோடும் நடிகர் தனுஷின் குபேரா படத்தின் OTT ரிலீஸ் எப்போது?
குபேரா படம்
தெலுங்கு பட இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், ராஷ்மிகா மந்தனா, நாகர்ஜுனா ஆகியோர் நடிப்பில் உருவான திரைப்படம் குபேரா.
தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைப்பில் தயாரான இப்படம் கடந்த ஜுன் 20ம் தேதி பிரம்மாண்டமாக வெளியானது.
இந்த படத்தில் தனுஷ் மற்றும் ராஷ்மிகாவின் நடிப்பில் பெரிய அளவில் ரசிகர்களால் பாராட்டப்பட்டது, ஆனால் படத்திற்கு கலவையான விமர்சனங்கள் தான் வந்துள்ளது.

ஓடிடி ரிலீஸ்
இந்த படம் தமிழ், தெலுங்கு என 2 மொழிகளில் உருவாகி மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது.
ஒரு படம் திரையரங்கில் வெளியாகி 3 வாரங்கள் கழித்தே ஓடிடியில் வெளியாகும்.
அதன்படி தனுஷின் குபேரா பட ஜுலை 18ம் தேதி ஓடிடியில் வெளியாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தை அமேசான் பிரைம் நிறுவனம் ரூ. 47 கோடிக்கு வாங்கி உள்ளதாக இணையத்தில் தகவல்கள் கசிந்துள்ளன.
சொந்த நட்சத்திரத்தில் ராகு பெயர்ச்சி... நிதி நிலையில் எதிர்பாராத அதிர்ஷ்டம் பெறும் 3 ராசிகள்! Manithan
சீனாவால் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்... பிரித்தானியா உட்பட ஐந்து நாடுகள் விடுத்த எச்சரிக்கை News Lankasri
மகளின் திருமணத்துக்கு முதலமைச்சர் விஜயை குடும்பத்துடன் சென்று அழைத்த குஷ்பு - உருக்கமான பதிவு IBC Tamilnadu