Rolls Royce கார், ரூ. 150 கோடி வீடு என கலக்கும் நடிகர் தனுஷின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?
நடிகர் தனுஷ்
நடிகர், பாடகர், பாடலாசிரியர், இயக்குனர், தயாரிப்பாளர் என ஆல் ரவுண்டராக திகழ்ந்து வருகிறார் நடிகர் தனுஷ்.
ஆரம்பத்தில் மோசமான விமர்சனங்களை சந்தித்த தனுஷ் இப்போது சிறந்த நடிகராக தேசிய விருது வாங்கி கெத்தாக வலம் வருகிறார்.
கோலிவுட்டை தாண்டி பாலிவுட், ஹாலிவுட் வரை சென்றுள்ள நடிகர் தனுஷ் இன்று தனது 40வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.
இந்த நிலையில் நடிகர் தனுஷின் சொத்து மதிப்பு பற்றியும் அவரின் சம்பள விவரம் பற்றியும் பார்க்கலாம்.
சொத்து மதிப்பு
கடந்தாண்டு ஃபோர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்ட தகவலின்படி ரூ. 160 கோடி என்று அறிவித்தது, ஆனால் தற்போதைய விவரப்படி அவரின் சொத்து மதிப்பு ரூ. 200 கோடியை தாண்டி இருக்கும் என கூறப்படுகிறது.
ஆழ்வார்பேட்டையில் ரூ. 18 கோடி மதிப்புள்ள சொகுசு வீடு உள்ள நிலையில் போயஸ் கார்டனில் நீச்சல் குளம், தியேட்டர், உடற்பயிற்சி கூடம் என சகல வசதியும் கொண்டு ரூ. 150 கோடி மதிப்பில் வீடு கட்டியுள்ளார்.
இவரிடம் ரூ.45 லட்சம் மதிப்புள்ள ஜாகுவார் XE, ரூ.98 லட்சம் மதிப்புள்ள ஃபோர்ட் மஸ்டாங்க், ரூ.3.5 கோடி மதிப்புள்ள பெண்ட்லி, ரூ.6.3 கோடி மதிப்புள்ள ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட், ரூ.1.65 கோடி மதிப்புள்ள ஆடி A8, ரூ.1.42 கோடி மதிப்புள்ள மெர்சிடிஸ் பென்ஸ் S-Class என பல விதமான ஆடம்பர கார்கள் உள்ளன.
தற்போதைய நிலவரப்படி அவர் ஒரு படத்துக்கு ரூ.30 முதல் ரூ.35 கோடி வரை சம்பளம் வாங்கி வருகிறாராம்.
சிறகடிக்க ஆசை சீரியல் நாயகன் மாற்றப்படுகிறாரா, ரசிகர்கள் ஷாக்- ஆனால்?