23 ஆண்டுகள்.. நடிகர் தனுஷின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?.. அடேங்கப்பா!
தனுஷ்
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் தனுஷ். கோலிவுட் சினிமாவில் துவங்கிய இவருடைய பயணம் தற்போது ஹாலிவுட் வரை சென்றுள்ளது.
நடிகர், தயாரிப்பாளர், எழுத்தாளர், பாடலாசிரியர், இயக்குநர், பாடகர் என பன்முக திறமைகொண்ட தனுஷின் இயக்கத்தில் கடைசியாக நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் திரைப்படம் வெளிவந்து ஓரளவு நல்ல வரவேற்பை பெற்றது.
அடுத்ததாக தனுஷ் இயக்கத்தில் இட்லி கடை படம் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. அதை தொடர்ந்து, தனுஷ் நடிப்பில் குபேரா திரைப்படம் வரும் ஜூன் 20 - ம் தேதி வெளிவர உள்ளது.
இத்தனை கோடியா?
இந்நிலையில், தனுஷ் சினிமா துறைக்கு வந்து இன்றுடன் 23 ஆண்டுகள் ஆன நிலையில், அவருடைய சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, இவருக்கு ரூ. 230 கோடிக்கும் மேல் சொத்து இருப்பதாக கூறப்படுகிறது.