இன்டர்நேஷ்னல் லெவலில் தனுஷ் கட்டிய வீட்டில் இவ்வளவு வசதிகளா?- பிரம்மிக்க வைக்கும் தகவல்கள்
நடிகர் தனுஷ்
தனுஷ் நடிப்பில் வருடா வருடம் ஒரு படம் வெளியாகி வருகிறது, கடந்த ஆண்டு திருச்சிற்றம்பலம் படம் வெளியானது, இந்த வருடம் வாத்தி என்ற திரைப்படம் வெளியாகி இருக்கிறது.
இப்படம் வெளியாக வெறும் 3 நாட்களே ஆனது, படத்திற்கான வசூலுக்கு முதல் நாளில் இருந்து எந்த குறையுமே இல்லை. தமிழகத்தில் மட்டுமே படம் ரூ. 20 கோடிக்கு வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.
இப்படத்தை தொடர்ந்து தனுஷ் நடிப்பில் கேப்டன் மில்லர் என்ற திரைப்படம் வெளியாக இருக்கிறது.
புதிய வீடு
தற்போது தனுஷ் கடந்த இரண்டு வருடங்களாக கட்டிவரும் தனது வீட்டின் கிரகப்ரவேசத்தை நேற்று (பிப்ரவரி 19) நடத்தி முடித்துள்ளார். கடந்த 2021ம் ஆண்டு சுமார் 25 கோடி செலவில் சென்னை போயஸ் தோட்டத்தில் 8 கிரவுண்ட் அளவிலான நிலம் ஒன்றை வாங்கினார்.
4 தளம் கொண்ட இந்த வீட்டை, ஐந்து நட்சத்திர ஹோட்டலுக்கு நிகரான வகையில் தனுஷ் டிசைன் செய்துள்ளாராம்.
பிரமாண்ட நீச்சல் குளம், ஒரு ஆடம்பர உட்புற விளையாட்டு திடல், உடற்பயிற்சி கூடம், ஹோம் தியேட்டர், குடும்பத்தினர் அனைவருக்கும் சர்வதேச அளவில் ரிமோட் கண்ட்ரோல் சிஸ்டம் கொண்டு தனி அறை உருவாக்கப்பட்டு உள்ளதாம்.
சில பொருட்கள் எல்லாம் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்து தனுஷ் வீட்டை இன்டர்நேஷ்னல் அளவில் கட்டியிருப்பதாக தெரிவிக்கின்றனர்.
ஒரே இடத்திற்கு சுற்றுலா சென்று மாட்டிக்கொண்ட அர்ச்சனா மற்றும் அருண்- வைரல் வீடியோ