15 ஏக்கர் நிலத்தில் பிரம்மாண்ட செட்.. நடிகர் தனுஷ் அடுத்த படம் குறித்து வெளிவந்த அதிரடி அப்டேட்
தனுஷ்
தமிழ் சினிமாவில் நடிகர் மற்றும் இயக்குநர் என பன்முகம் கொண்டவராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். இவர் இயக்கத்தில் கடைசியாக உருவான நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் திரைப்படம் வெளிவந்து ஓரளவு நல்ல வரவேற்பை பெற்றது.
இதை தொடர்ந்து இவர் இயக்கத்தில் அடுத்ததாக இட்லி கடை படம் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. அதை தொடர்ந்து, தனுஷ் நடிப்பில் குபேரா திரைப்படம் வரும் ஜூன் 20 - ம் தேதி வெளிவர உள்ளது.
நடிகர் தனுஷ் தற்போது ஹிந்தியில் Tere Ishk Mein திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஆனந்த் எல். ராய் இயக்கி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
பிரம்மாண்ட செட்
இந்நிலையில், அடுத்து தனுஷ் நடிக்கப்போகும் படம் குறித்து ஒரு அதிரடி அப்டேட் கிடைத்துள்ளது. அதன்படி, போர் தொழில் பட இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனுஷ் புதிய படத்தில் நடிக்கவுள்ளார்.
வேல்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு 'அறுவடை' என தலைப்பு வைத்துள்ளனராம். இதன் படப்பிடிப்பு முதலில் ஏப்ரல் மாதத்தில் துவங்குவதாக இருந்தது.
ஆனால் படத்தின் செட் அமைக்கும் பணி தாமதம் ஆனதால் இதன் படப்பிடிப்பு ஜுன் மாதம் முதல் துவங்கும் என சொல்லப்படுகிறது. இந்த படத்திற்கான செட் அமைக்கும் பணியை தயாரிப்பாளர் ஐசரி கணேஷிற்கு ஈ.வி.பி நகருக்கு எதிரில் சொந்தமான 15 ஏக்கர் நிலத்தில் அமைத்து வருகின்றனர்.