அவரை போன்ற ஒரு நடிகருடன் நடிப்பது பெருமை.. தனுஷ் சொன்ன அந்த நடிகர் இவரா?
தனுஷ்
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் நடிகர் தனுஷ். இவர் நடித்தும் இயக்கியும் வெளிவந்த ராயன் திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்தது.
அதை தொடர்ந்து, தனுஷ் இயக்கத்தில் கடைசியாக நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படம் வெளியானது. மேலும் இட்லி கடை எனும் படத்தையும் தனுஷ் இயக்கி வருகிறார்.
இயக்கத்தை தாண்டி தனுஷ் ஹீரோவாக மட்டும் நடித்து வரும் படம் குபேரா. சேகர் கம்முலா இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் தனுஷுடன் இணைந்து ராஷ்மிகா மந்தனா, நாகர்ஜுனா ஆகியோர் நடித்துள்ளனர். இப்படம் வரும் ஜுன் மாதம் 20-ம் தேதி வெளியாக உள்ளது.
இவரா?
இந்நிலையில், நடிகர் நாகார்ஜுனா குறித்து தனுஷ் பேசிய விஷயம் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில், " நாகார்ஜுனா போன்ற லெஜண்டுகளின் நடிப்பை பார்த்து பிரமித்து போயுள்ளேன்.
அவர் நடித்த படங்கள் இன்றளவும் பேசப்பட்டு வருகின்றன. அப்படிப்பட்ட பெருமை மிகுந்த நடிகருடன் இணைந்து நடிப்பது எனக்கு பெருமை. படப்பிடிப்பில் அவரிடம் இருந்து பல விஷயங்கள் கற்றுக்கொண்டேன். அவற்றை நிச்சயம் நானும் பின்பற்றுவேன்" என்று தெரிவித்துள்ளார்.

ஏ. ஆர் ரஹ்மான் பானியில் சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த ரவிமோகன்- வழக்கறிஞர் வெளியிட்ட அறிக்கை Manithan

500 Invar ஏவுகணைகளை வாங்கும் இந்தியா - பாக்., சீனாவிற்கு பீதியை கிளப்பும் உள்ளூர் தயாரிப்பு News Lankasri

துருக்கியுடன் உறவுகளை இந்தியா துண்டித்தால்... இந்தப் பொருட்களின் விலை ராக்கெட் வேகத்தில் உயரும் News Lankasri
