என்னது தனுஷ் மகன் யாத்ராவின் +2 மார்க் இதுவா?- வைரலாகும் மதிப்பெண் விவரம்
நடிகர் தனுஷ்
நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவில் பல மோசமான விமர்சனங்களை தாண்டி இப்போது சிறந்த நாயகனாக வளர்ந்து இருக்கிறார்.
இவர் நடிப்பு என்பதை தாண்டி இயக்குனர், தயாரிப்பாளர், பாடலாசிரியர், பாடகர் என பன்முகம் கொண்டு திகழ்கிறார். கடைசியாக இவரது நடிப்பில் கேப்டன் மில்லர் படம் வெளியாகி இருந்தது, ஆனால் படம் சரியான வரவேற்பு பெறவில்லை.
இதற்கு இடையில் தனுஷ்-ஐஸ்வர்யா விவாகரத்து விஷயம் அதிகமாக பேசப்பட்டு வந்தது.
அதேபோல் ஐஸ்வர்யா தற்போது புதிய வீடு ஒன்றை வாங்கி இருக்கும் செய்தியும் உலா வந்தது.
+2 மார்க்
நேற்று தமிழகம் முழுவதும் 12வது வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது.
இதில் சூர்யா-ஜோதிகா மகள் தியாவும் 12ம் வகுப்பு தான் என ஒரு விவரம் வெளியானது, ஆனால் அது பொய் தகவல் என நாமே அறிவித்திருந்தோம்.
இந்த நிலையில் நடிகர் தனுஷின் மகன் யாத்ராவும் 12ம் வகுப்பு தான், அவரது மதிப்பெண் இது என ஒரு தகவல் வலம் வருகிறது.
மொழிப்பாடத்தில் 98 மதிப்பெண்ணும், ஆங்கிலத்தில் 92, கணக்கு 99, பிசிக்ஸ் 91, கேமிஸ்ட்ரி 92, பயாலஜியில் 97 மதிப்பெண் பெற்று 600க்கு 569 மதிப்பெண் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது, இது எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை.

காதலியை கைவிட்ட நாஞ்சில் விஜயன்- குழந்தைக்காக செய்தாரா? வெளிச்சத்திற்கு கொண்டு வந்த திருநங்கை Manithan
