தாய் கிழவிக்கு நன்றி சொன்ன திரு.. நடிகர் தனுஷின் நெகிழ்ச்சி பதிவு இதோ!
திருச்சிற்றம்பலம்
காதல் மற்றும் நகைச்சுவை கலந்த நாடகத் திரைப்படம் திருச்சிற்றம்பலம். இந்த படம் 2022-ஆம் ஆண்டு வெளிவந்தது. இந்த படத்தை மித்ரன் ஆர். ஜவஹர் எழுதியும், இயக்கியும் இருந்தார்.
மேலும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்திருந்தது. இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நித்யா மேனன் நடித்திருப்பார். அதை தொடர்ந்து, அந்த படத்தில் பாரதிராஜா, பிரகாஷ் ராஜ் , ராஷி கண்ணா மற்றும் பிரியா பவானி சங்கர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.
தன் உயிர் தோழியை காதலித்து தனுஷ் இந்த படத்தில் திருமணம் செய்து கொள்வர். இந்த படம் வாழ்க்கையுடன் இணைவதால் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
மேலும் இப்படத்தில் இடம்பெற்ற பாடல்களும் சூப்பர்ஹிட்டானது. குறிப்பாக நித்திய மேனனனை குறிப்பிட்டு தாய் கிழவி என வரும் கலாட்டாவான நகைச்சுவை பாடல் மக்கள் மத்தியில் சிறந்த வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
நெகிழ்ச்சி பதிவு
இதை தொடர்ந்து, தற்போது திருச்சிற்றம்பலம் படத்திற்கு ஃபிலிம் ஃபேர் விருதுகள் கிடைத்துள்ளது. அதை குறித்து நடிகர் தனுஷ் ஒரு நெகிழ்ச்சி பதிவை தன் வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில், ஒரு படத்திற்காக ஹீரோவும், ஹீரோயினும் இணைந்து ஒரே நேரத்தில் சிறந்த நடிகர், நடிகைக்கான விருதை பெறுவது என்பது பெரிய விஷயம் எனவும், திருவும், ஷோபனாவும் ரொம்ப ஸ்பெஷல் என்றும், திருவை அழகாக காட்டியதற்கு மிகவும் நன்றி ஷோபனா என்றும் பதிவிட்டுள்ளார் நடிகர் தனுஷ்.

அமெரிக்காவில் தோசையால் புகழ்பெற்ற இலங்கை தமிழர்! கனடா, ஜப்பானிலும் ரசிகர்கள்..யார் அவர்? News Lankasri
