ஓம் பட இசை வெளியீட்டு விழாவில் நடிகர் தனுஷ் அணிந்த வாட்ச் விலை... இத்தனை கோடியா?
தமிழ் சினிமாவில் அண்ணனின் உதவியுடன் சினிமாவில் களமிறங்கி தனக்கென தனி இடம் பிடித்தவர் தான் நடிகர் தனுஷ். இவரெல்லாம் நடிகரா என சொன்னவர்களை தன்னை சிறந்த நடிகன் என சொல்ல வைத்தவர்.
பாஸ் நான் சிறந்த நடிகன் மட்டும் கிடையாது என பாடலாசிரியர், பாடகர், தயாரிப்பாளர், இயக்குனர் என பல துறைகளிலும் களமிறங்கி தன்னை நிரூபித்திருக்கிறார்.

ஓம் திரைப்படம்
Om Movie: நடிகர் தனுஷ் நடிப்பில் கடைசியாக கர என்ற படம் வெளியாகி இருந்தது. ஆனால் அப்படம் எதிர்ப்பார்த்த அளவிற்கு வெற்றியடையவில்லை. அப்படத்தை தொடர்ந்து தனுஷ் நடிப்பில் வெளியாக இருக்கும் திரைப்படம் தான் ஓம்.
அமரன் வெற்றிப்பட இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்க தனுஷின் வுன்டர்பார் ஃபிலிம்ஸ் மற்றும் ஆர்டேக் ஸ்டூடியோஸ் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர். தனுஷுடன், மம்முட்டி, சாய் பல்லவி, ஸ்ரீலீலா, நஸ்ரூதின் ஷா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார்.

வாட்ச் விலை
Dhanush Watch: வரும் நவம்பர் 20ம் தேதி ஓம் திரைப்படம் வெளியாகவுள்ள நிலையில் படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியிட்டு விழா அண்மையில் நடைபெற்றது. அவ்விழாவிற்கு நடிகர் வழக்கம் போல் வேஷ்டி சட்டையில் வர அவர் அணிந்திருந்த வாட்ச் ரசிகர்களின் கவனத்தை அதிகம் பெற்றுள்ளது.

அவர் அணிந்த வாட்ச் வான்கார்ட் (Vanguart) நிறுவனத்தின் ஆர்ப் ஃப்ளையிங் டூர்பில்லன் என கூறப்படுகிறது. 18 கேரட் ரோஸ் கோல்டு மற்றும் நீல நிற செராமிக் மூலம் உருவாக்கப்பட்டுள்ள இந்த வாட்ச் விலை சுமார் ரூ. 2.5 லட்சம் அமெரிக்க டாலர்கள் மதிப்புடையதாம்.
Bigg Boss 10: இதை உங்க வீட்டுல வைச்சிக்கோங்க... என்னிட்ட வைச்சிக்காதீங்க! விளாசிய விஜய் சேதுபதி Manithan
பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணையும் விவகாரம்: வெளிப்படையாக எதிர்ப்பு துவங்கியது News Lankasri
ஹார்முஸ் முடக்கம்... லொறிகளில் கச்சா எண்ணெய் ஏற்றுமதியை முன்னெடுக்கும் மத்திய கிழக்கு நாடு News Lankasri