நடிகர் தர்மேந்திரா உடல் நிலை மோசம்? தீவிர சிகிச்சையில் நடிகர்
தர்மேந்திரா
இந்திய திரையுலகில் தனக்கென்று தனி இடத்தை உருவாக்கியவர் பழம்பெரும் நடிகர் தர்மேந்திரா. இவருக்கு தற்போது 89 வயது ஆகிறது.
கடந்த சில நாட்களாகவே உடல்நிலை மோசமாக இருப்பதால், மும்பையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த நிலையில், நடிகர் தர்மேந்திராவின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும், அவர் வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வருவதாகவும் செய்திகள் வெளியாகி அதிர்ச்சியை கொடுத்தது. ஆனால், இந்த தகவலை தர்மேந்திராவின் மகன் சன்னி தியோலின் பிரதிநிதி மறுத்துள்ளார்.
உடல் நிலை எப்படி உள்ளது
அவர் கூறுகையில், "நடிகர் தர்மேந்திராவின் உடல்நிலை சீராக உள்ளது. அவர் தொடர்ந்து மருத்துவமனையில் கண்காணிப்பில் இருந்து வருகிறார். அவர் உடல்நிலை குறித்த அடுத்தகட்ட தகவல் கிடைக்கும்போது பகிரப்படும். அவர் விரைவாக குணமடைய அனைவரின் பிரார்த்தனைகளும் தேவை" என கூறினார்.

ஷோலே, அப்னே, தர்மன் வீர், தோஸ்த் போன்ற பல படங்களில் தர்மேந்திரா நடித்துள்ளார். இதில் ஷோலே உலக புகழ்பெற்ற திரைப்படம் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.
சமந்தா கர்ப்பமாக உள்ளாரா? சமூக வலைதளங்களில் குவியும் வாழ்த்துகள்; ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு Manithan
புதன் - சுக்கிரன் உருவாக்கும் லட்சுமி நாராயண ராஜயோகம் : இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாப்பாட் உறுதி! Manithan
ஈரான் ஒப்பந்தத்துக்குப் பிறகு ஹார்முஸை கடந்த முதல் 3 எண்ணெய் கப்பல்கள்., மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம் News Lankasri