காந்தாரா 2 ஷூட்டிங்கில் நடிகர் மரணம்.. அதிர்ச்சி சம்பவம்
காந்தாரா படம் எந்த அளவுக்கு ஹிட் என சொல்லி தெரியவேண்டியது இல்லை. ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த இந்த படம் கன்னடம் மட்டுமின்றி மற்ற மொழிகளிலும் பெரிய வசூலை குவித்தது.
தற்போது அதன் அடுத்த பாகம் Kantara: Chapter 1 என்ற பெயரில் தற்போது படமாக்கப்பட்டு வருகிறது. இன்னும் பிரம்மாண்ட பட்ஜெட்டில் இந்த படத்தை எடுத்து வருகின்றனர்.
நடிகர் மரணம்
கர்நாடகாவில் இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அதில் பங்கேற்று இருந்த ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் MF கபில் என்பவர் மரணம் அடைந்து இருக்கிறார் என்கிற செய்தி சினிமா துறையில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
அவர் Kollur Souparnika ஆற்றில் அவர் குளித்த போது அடித்துச்செல்லப்பட்டு இருக்கிறார்.
அவரை தேடும் பணியில் தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவினர் இறங்கிய நிலையில் மாலையில் அவர் உடல் தான் கண்டெடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த சம்பவத்தால் தற்போது காந்தாரா 2 படத்தின் ஷூட்டிங் நிறுத்தப்பட்டு இருக்கிறது.