58 வயது வரை சிங்கிளாகவே இருக்கும் எஸ்.ஜே.சூர்யா சொத்து மதிப்பு இத்தனை கோடியா?... பிறந்தநாள் ஸ்பெஷல்
எஸ்.ஜே.சூர்யா
துணை இயக்குனராக இருந்து பின் இயக்குனராக வெற்றிப் படங்களை கொடுத்து இப்போது குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் வில்லனாகவும் சில படங்களில் ஹீரோவாகவும் நடித்து வருபவர் எஸ்.ஜே.சூர்யா.
வாலி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அதன்பின் குஷி, நியூ, அன்பே ஆருயிலே, இசை போன்ற தமிழ் படங்களையும் நாணி, புளி போன்ற தெலுங்கு படங்களையும் இயக்கியுள்ளார்.

பின் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய இறைவி படத்தில் எஸ்.ஜே.சூர்யா நடித்தார். நடிப்பு டிராக் சூப்பராக ஒர்க் அவுட் ஆகிறது என முடிவு செய்து அப்படத்தை தொடர்ந்து ஸ்பைடர், மெர்சல், மாநாடு, டான், மார்க் ஆண்டனி, தெலுங்கு படங்கள் என நிறைய நடிக்கிறார்.
சொத்து மதிப்பு
குணச்சித்திர வேடங்கள் மட்டுமில்லாது வில்லனாக, ஹீரோவாக கலக்கும் எஸ்.ஜே.சூர்யா ஒரு படத்தில் நடிப்பதற்காக ரூ. 7 முதல் 8 கோடி வரை சம்பளம் வாங்குகிறாராம்.

நடிகர் எஸ்.ஜே.சூர்யாவுக்கு சென்னையிலேயே இரண்டு வீடுகள் சொந்தமாக இருக்கிறது. மேலும் சொந்த ஊரிலும் சொத்துக்களை வாங்கி வைத்திருக்கிறாராம். BMW, ஆடி போன்ற சொகுசு கார்களும் இவரிடம் இருக்கிறது.

58 வயது வரை சிங்கிளாகவே இருக்கும் எஸ்.ஜே.சூர்யாவின் சொத்து மதிப்பு ரூ. 150 முதல் ரூ. 160 கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது.