ரோபோ ஷங்கர் நினைவாக பிரபல கோவிலுக்கு Robotic யானையை பரிசளித்த பிரபல சீரியல் நடிகர்... இந்திரஜா வெளியிட்ட வீடியோ
ரோபோ ஷங்கர்
கடந்த செப்டம்பர் 18ம் தேதி தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஷாக் கொடுக்கும் வகையில் ஒரு விஷயம் வந்தது.
அதாவது காமெடி மூலம் சின்னத்திரையில் பெரிய அளவில் கலக்கி ரசிகர்களின் கவனத்தை பெற்றவருக்கு வெள்ளித்திரையும் நல்ல வரவேற்பு கொடுத்தது. அஜித், தனுஷ் என நிறைய முன்னணி நடிகர்களின் படங்களில் இணைந்து நடித்தார்.
இடையில் மஞ்சள் காமாலையால் கடுமையாக பாதிக்கப்பட சிகிச்சை பெற்று வந்தவர் குணமானதும் மீண்டும் சினிமாவில் கலக்க தொடங்கினார். புதிய படங்களின் பூஜையில் எல்லாம் கலந்துகொண்டார், ஆனால் கடந்த அக்டோபர் 18ம் தேதி உயிரிழந்தார்.
நினைவு பரிசு
ரோபோ ஷங்கர் பற்றி அவருடன் பழகியவர்கள் நிறைய பதிவுகள் போட்ட வண்ணம் உள்ளனர். இந்த நிலையில் அவரது மகள் இந்திரஜா ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.
அதாவது ரோபோ ஷங்கர் நினைவாக Robotic யானையை குபேரர் கோவிலுக்கு பரிசாக கொடுத்துள்ளார் பிரபல சீரியல் நடிகர் டிங்கு. இந்த தகவலை இந்திரஜா வீடியோவுடன் வெளியிட அனைவரும் நல்ல விஷயம் என பாராட்டி வருகிறார்கள்.