திருமண நாளில் புதிய கார் வாங்கியுள்ள நடிகரும், பிக்பாஸ் பிரபலமுமான கணேஷ் வெங்கட்ராமன்... புகைப்படங்கள் இதோ
கணேஷ் வெங்கட்ராமன்
ராதா மோகன் இயக்கிய அபியும் நானும் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நடிகராக அறிமுகமானவர் கணேஷ் வெங்கட்ராமன்.
இப்படத்தை தொடர்ந்து தீயா வேலை செய்யனும் குமாரு, கோ, பனித்துளி, உன்னைப்போல் ஒருவன் போன்ற திரைப்படங்களில் நடித்தாலும் அவருக்கு பெரிய அளவில் அங்கீகாரம் கிடைக்கவில்லை.
இதனால் பிக்பாஸ் வாய்ப்பை பயன்படுத்தலாம் என முதல் சீசனில் கலந்துகொண்டார், நேர்மையின் அடையாளம் என கொண்டாடப்பட்டவர் இறுதிப்போட்டி வரை முன்னேறினார்.

புதிய கார்
சினிமாவை தாண்டி சொந்த வாழ்க்கையில் கணேஷ் வெங்கட்ராமன் பிரபல தொகுப்பாளினியும், நடிகையுமான நிஷாவை கடந்த 2015ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். இந்த நிலையில் கணேஷ் வெங்கட்ராமன்-நிஷா திருமண நாள் ஸ்பெஷலாக புதிய காரை வாங்கியுள்ளனர்.
அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை பதிவிட ரசிகர்கள் வாழ்த்துக்களை குவித்து வருகிறார்கள்.