அவன் இவன் பட நடிகருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை
இயக்குனராக சில படங்கள் இயக்கி அதன் பின் நடிகராக அறிமுகம் ஆனவர் ஜி.எம்.குமார்.
ஜி.எம்.குமார்
எழுத்தாளர், தயாரிப்பாளர் என சினிமா துறையில் பல துறைகளில் திறமையை வெளிப்படுத்தி இருக்கும் அவர் 1986ல் அறுவடைநாள் படத்தின் மூலம் இயக்குனர் ஆக.
பிக்பாக்கெட், இரும்பு பூக்கள் போன்ற படங்களை இயக்கிய அவர் பின்னர் ஒருகட்டத்தில் நடிகராகவும் களமிறங்கி பல தமிழ் படங்களில் நடித்தார். அவன் இவன் படத்தின் ஜமீன்தார் ரோலில் அவர் நடித்து இருந்தார். தாரை தப்பட்டை, அப்புச்சி கிராமம் உள்ளிட்ட பல படங்களிலும் நடித்து இருக்கிறார்.
மருத்துவமனையில் அனுமதி
தற்போது ஜி.எம்.குமாருக்கு உடல்நல குறைவு ஏற்பட்டு சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார். அவருக்கு தீவிர சிகிச்சையும் வழங்கப்பட்டு வருகிறது.
அவர் ஹாஸ்பிடலில் இருக்கும் புகைப்படம் ஒன்றும் வைரலாகி வருகிறது. ஜி.எம்.குமார் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என ரசிகர்கள் பிராத்தித்து வருகின்றனர்.

விமான விபத்தில் தப்பித்த பயணி.., புகை சூழ்ந்த இடத்தில் இருந்து வெளிவரும் புது வீடியோ வெளியீடு News Lankasri

தோனியால் 7 பேரின் கிரிக்கெட் வாழ்க்கை சாக்கடையில்.. முன்னாள் வீரர் பகீர் குற்றச்சாட்டு IBC Tamilnadu

Numerology: இந்த தேதிகளில் பிறந்தவங்க லட்சுமி தேவியின் அருள் கொண்டவர்களாம்.. பணம் இனி கொட்டும் Manithan
