பிரபல நடிகர் ஹரிஷ் கல்யாணுக்கு குழந்தை பிறந்தது... நடிகரே பகிர்ந்த பதிவு
ஹரிஷ் கல்யாண்
தமிழ் சினிமாவில் வலம்வரும் இளம் நடிகர்களில் ஒருவர்.
கடந்த 2010ம் ஆண்டு வெளியான சிந்து சமவெளி என்ற படத்தின் மூலம் தனது திரைப்பயணத்தை தொடங்கியவர் தான் ஹரிஷ் கல்யாண். அதன்பின் பொறியாளர், வில் அம்பு போன்ற படங்களில் மூலம் தமிழ் மக்களின் கவனம் பெற்றவர் தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார்.

இடையில் அதாவது கடந்த 2017ம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் முதல் சீசனில் வைல்ட் கார்ட்டு என்ட்ரி கொடுத்தார். நிகழ்ச்சியில் இவரது விளையாட்டு, நட்பு பழக்கம் போன்ற விஷயங்களால் பாராட்டப்பட்டார்.
பின் Pyaar Prema Kaadhal, Ispade Rajavum Idhaya Raniyum, பார்க்கிங், லப்பர் பந்து, டீசல் போன்ற படங்கள் மூலம் ஹரிஷ் கல்யாணிற்கு பெரிய வெற்றி கிடைத்தது.
திருமணம்
சினிமாவில் பிஸியான நடிகராக வலம்வந்த ஹரிஷ் கல்யாண் கடந்த 2022ம் ஆண்டு நர்மதா உதயகுமார் என்பவரை திருமணம் செய்துகொண்டார்.

இந்த நிலையில் ஹரிஷ் கல்யாண் ஒரு சந்தோஷ செய்தி வெளியிட்டுள்ளார். அதாவது ஹரிஷ் கல்யாண்-நர்மதாவிற்கு இன்று மார்ச் 2 பெண் குழந்தை பிறந்துள்ளதாம்.