மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அம்மாவை குறித்து சூர்யா பட நடிகர் உருக்கம்
ஜெகன்
பல படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் தான் ஜெகன். இவர் சூர்யா நடிப்பில் 2009 -ம் ஆண்டு வெளியான "அயன்" படத்தில் முக்கியமான ரோலில் நடித்திருப்பார்.
இப்படத்திற்கு பிறகு இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்தது. ஜெகன் விஜய் டிவியில் ஒளிபரப்பான கனெக்ஷன் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கி பிரபல தொகுப்பாளராகவும் திகழ்ந்தார்.
சமீபத்தில் இவர் நடிப்பில் "பல்லு படாம பாத்துக்க" என்ற படம் வெளியானது. ஆனால் இந்த படத்திற்கு மக்கள் கலவையான விமர்சனமே கொடுத்து வருகின்றனர்.

ஜெகன் உருக்கம்
சமீபத்தில் ஜெகன், அவரின் அம்மா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதை குறித்து உருக்கமான பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.
அதில் அவர், ”என்னுடைய தாய் சேயாகிறாள்.. உடல் நலம் குறைந்து என்னை ஈன்றவள் அனுமதிக்கப்பட்டிருக்கிறாள் ஏதுமறியா குழந்தை போல் உறங்குகிறாள் எங்களை ஈன்றபோது எத்தனை இரவுகள் இப்படி தானே கவலை தோயத்த அக்கறையுடன் எங்களை கவனித்திருப்பாய்.”
”இந்த ஓர் இரவில் என் நன்றி கடனை திரும்ப தர இயலாது என்பதை எண்ணி கூனிப்போகிறேன். உன் நலம் வேண்டி என் சிவனை வேண்டுகிறேன்” என்று கூறியுள்ளார்.
அவர் விரையில் குணமடைய வேண்டும் என வேண்டுவதாக தற்போது ரசிகர்கள் ஜெகனுக்கு கமெண்ட்டில் கூறி வருகின்றனர்.
ஷிவானி நாராயணனுக்கு திருமணமா? போட்டோ பார்த்து ஷாக்கான ரசிகர்கள்