பழம்பெரும் நடிகர் ஜெய்சங்கரின் மகன் இந்த சீரியலில் நடித்துள்ளாரா?... எத்தனை பேருக்கு தெரியும்
ஜெய்சங்கர்
தமிழ் சினிமாவின் ஜேம்ஸ்பாண்ட் என ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர் பழம்பெரும் நடிகர் ஜெய்சங்கர்.
இவர் பெரும்பாலும் துப்பறியும் கதாபாத்திரம், சண்டை காட்சிகள், காவலர் போன்ற கதாபாத்திரங்களை ஏற்று நடித்துள்ளார்.
இவர் குழந்தையும் தெய்வமும், வல்லவன் ஒருவன், இரு வல்லவர்கள், கருந்தேள் கண்ணாயிரம், சி.ஐ.டி.சங்கர், பாலச்சந்தரின் நூற்றுக்கு நூறு போன்ற படங்கள் மிகவும் பிரபலமானவர்.
முரட்டுக்காளை படத்தில் வில்லனாக நடித்து அசத்த அதன்பின் சில படங்களிலும் வில்லனாக நடித்தார்.
நல்ல மனம் படைத்தவர், எந்த ஒரு விளம்பரமும் இல்லாமல் ஏழைகளுக்கு உதவும் இயல்புடையவர்.

நடிகரின் மகன்
ஜெய்சங்கர் அவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர், அதில் ஒருவர் கண் மருத்துவர். தனது தந்தையின் பிறந்த நாளில் 15 இலவச கண் அறுவை சிகிச்சைகளை நடத்துகிறார்.
இன்னொரு மகன் சஞ்சய் சங்கர் இசை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன்பின் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி தொடரில் தொழிலதிபர் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

ஈரான் மீது திரும்பும் உலக நாடுகள் கவனம்: உக்ரைனுக்கு நல்லதல்ல: ஜெலென்ஸ்கி புதிய நகர்வு News Lankasri
ட்ரம்பிற்கு அடுத்த பேரிடியை இறக்கிய ஈரான்... ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் புதிய திருப்பம் News Lankasri
ஈரானில் ஸ்டார்லிங்க் மூலம் இணைய சேவை வழங்கிய இளைஞர்: அந்நாட்டு பொலிஸார் அதிரடி நடவடிக்கை News Lankasri