பிரபல நடிகர் ஜனகராஜா இது, உடல் மெலிந்து அடையாளமே தெரியலையே- ஷாக்கிங் லேட்டஸ்ட் போட்டோ
நடிகர் ஜனகராஜ்
என் பொண்டாட்டி ஊருக்கு போய்ட்டா, தங்கச்சிக்கு நாய் கடிசிடுச்சு பா இந்த வசனங்கள் எல்லாம் தமிழ் சினிமாவில் பிரபலம். சில மீம்ஸ்களும் இந்த வசனங்கள் வைத்து வந்துள்ளது.
இந்த வசனங்களின் காமெடி காட்சிகளில் நடித்திருந்தவர் நடிகர் ஜனகராஜ். ரஜினி, கமல், பிரபு, சத்யராஜ், கார்த்திக் என அனைத்து முன்னணி ஹீரோக்களுடனும் இணைந்து நடித்து தனது நகைச்சுவையால் கலக்கியவர்.
பின் இடையில் பல காலம் சினிமாவில் நடிக்காமல் இருந்தவர் விஜய் சேதுபதியின் 96 படத்தில் நடித்தார். அந்த படத்தில் பள்ளிக் கூடத்தின் பாதுகாவலராக நடித்திருப்பார்.
லேட்டஸ்ட் க்ளிக்
அந்த படத்தில் கூட கொஞ்சம் உடலுடன் காணப்பட்டவர் அதன்பிறகு காணவில்லை. இந்த நிலையில் 68 வயதாகும் நடிகர் ஜனகராஜின் தற்போதைய புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதில் அவர் உடல் எடை மிகவும் மெலிந்து ஆளே வேறொருவர் போல் காணப்படுகிறார்.
இதைப் பார்த்த ரசிகர்கள் 96 படத்தில் கூட நன்றாக இருந்தாரே அதற்குள் இப்படி உடல்எடை மெலிந்து காணப்படுகிறாரே என வருத்தம் அடைந்துள்ளனர்.