நான் விஜய் அண்ணா பேன், ஆனா அஜித் ! - தனக்கு பிடித்த நடிகர் குறித்து ஜெயம் ரவி பேசிய விஷயம்..
அஜித் குறித்து நடிகர் ஜெயம் ரவி
நடிகர் ஜெயம் ரவி தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர், இவர் நடிப்பில் அடுத்தடுத்து முக்கிய திரைப்படங்கள் வெளியாக இருக்கிறது.
கடைசியாக இவர் நடிப்பில் பூமி திரைப்படம் வெளியான நிலையில் அப்படத்தை தொடர்ந்து பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்காக பல வருடங்களாக நடித்து வந்தார்.
மேலும் இந்தாண்டு அவர் நடிப்பில் பொன்னியின் செல்வன், அகிலன் உள்ளிட்ட முக்கிய திரைப்படங்கள் அடுத்தடுத்து வெளியாக இருக்கின்றன.
இதற்கிடையே நடிகர் ஜெயம் ரவி சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்டு பல சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.
அப்படி அவர் நடிகர் அஜித் குறித்து பேசுகையில் “தல எல்லாம் கடின உழைப்பால் மேலே வந்தவர், அவருக்கென பெரிய ரசிகர்கள் கூட்டத்தை உருவாகிக் கொண்டார்.
நான் விஜய் அண்ணா ரசிகர் தான், ஆனால் நடிகர் அஜித் மீது எனக்கு மிக பெரிய மரியாதை உண்டு” என பேசியிருக்கிறார். இதற்கிடையே நடிகர் விஜய் ரசிகர்கள் ஜெயம் ரவி சொன்ன விஷயத்தை இணையத்தில் பரப்பி வருகின்றனர்.
அச்சு அசல் நடிகை சமந்தா போலவே இருக்கும் நபர் ! ரசிகர்களை அச்சர்யத்தில் ஆழ்த்திய புகைப்படம்..

புலம்பெயர்ந்தோர் விவகாரம்... சில நாடுகளின் விசா அனுமதியை ரத்து செய்யவிருக்கும் பிரித்தானியா News Lankasri

சூட்டிங் சென்ற மாதம்பட்டி திரும்பி வீட்டுக்கு வராதது ஏன்? குழந்தைக்கு நியாயம் கேட்கும் ஜாய்! Manithan

அமெரிக்காவில் தோசையால் புகழ்பெற்ற இலங்கை தமிழர்! கனடா, ஜப்பானிலும் ரசிகர்கள்..யார் அவர்? News Lankasri
