நடிகர் ஜீவாவின் மகனா இவர், நன்றாக வளர்ந்து ஹீரோ ரேஞ்சிற்கு உள்ளாரே.. வைரலாகும் போட்டோ
நடிகர் ஜீவா
குட் பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளர் ஆர்.பி.சௌத்ரியின் மகன் என்ற அடையாளத்தோடு தமிழ் சினிமாவில் நாயகனாக களமிறங்கியவர் நடிகர் ஜீவா.
2003ம் ஆண்டு ஆசை ஆசையாய், தித்திக்குதே போன்ற படங்களின் மூலம் சினிமாவில் ஹீரோவாக என்ட்ரி கொடுத்தவர் சாக்லெட் பாயாக கொண்டாடப்பட்டார்.
ஆனால் அவர் சில படங்களுக்கு பிறகு உடனே தனது டிராக்கை மாற்றி ராம், கற்றது தமிழ் என வித்தியாசமான கதைக்களம் கொண்ட படங்களில் நடித்தார்.
சிவா மனசுல சக்தி கெரியரில் பெஸ்ட் படமாக அமைய அதன்பின் நடித்த கோ ஜீவானின் கெரியரில் ஒரு மைல்கல் படமாக அமைந்தது.
பின் விஜய்யுடன் நண்பன், நீதானே என் பொன்வசந்தம், ஜிப்ஸி என நடித்து வந்தார். தற்போது ஜீவா அகத்தியா என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.
மகன் போட்டோ
கடந்த 2007ம் ஆண்டு சுப்ரியா என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார் ஜீவா, இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.
தற்போது நடிகர் ஜீவா தனது மனைவி மற்றும் மகனுடன் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்துள்ளார். அப்போது எடுக்கப்பட்ட ஜீவா மகனின் போட்டோவை பார்த்த ரசிகர்கள் அடுத்த ஹீரோ ரெடி என கமெண்ட் செய்து வருகிறார்கள்.