16 வருடங்களுக்கு பிறகு நடிகர் விஜய்யுடன் இணைந்துள்ள பிரபலம்- தளபதி 68 ப்டேட்
விஜய் 68
வெங்கட் பிரபு, அஜித்தை வைத்து மங்காத்தா படத்தை இயக்கி வெற்றி கண்டார்.
அவரை தொடர்ந்து விஜய்யுடன் எப்போது இணைவீர்கள் என நிறைய கேள்வி வெங்கட் பிரபுவை ரசிகர்கள் கேட்டுவிட்டனர், அவர்களுக்கு பதில் கொடுக்கும் வகையில் இப்போது விஜய்யை வைத்து அவரது 68வது படத்தை இயக்கி வருகிறார்.
படத்தின் படப்பிடிப்பு வெளிநாடுகளில் வேகமாக நடந்து வருகிறது. இந்த நேரத்தில் தான் விஜய் 68 படத்தின் டைட்டில் அப்டேட் விரைவில் வருகிறது என டுவிட் போட்டுள்ளார் தயாரிப்பாளர் அர்ச்சனா.

புதிய நடிகர்
பாஸ் என்ற டைட்டில் செய்தி வைரலாக அந்த பெயர் கண்டிப்பாக கிடையாது என்று டுவிட் செய்து வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் தயாரிப்பாளர்.
இந்த நிலையில் ஒரு புதிய தகவல் ஒன்று வலம் வருகிறது. அதாவது இந்த படத்தில் காமெடியனாக கஞ்சா கருப்பு இணைந்துள்ளதாக கூறப்படுகிறது. 16 வருடங்களுக்கு பிறகு கஞ்சா கருப்பு விஜய்யுடன் இணைந்து நடிக்க இருக்கிறாராம்.
இதற்கு முன்பு விஜய்யுடன் சிவகாசி மற்றும் அழகிய தமிழ் மகன் படங்களில் நடித்திருந்தார்.

கர்நாடக வனப்பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்ட தங்கம், லித்தியம் - சுரங்க அனுமதியில் சிக்கல் News Lankasri
திரையில் டான்ஸ் ஆடுறவன் இல்ல.. தரையில் இறங்கி அடிக்கிறவன்தான் தலைவன் - திவ்யா சத்யராஜ் IBC Tamilnadu