பல வருடங்களுக்கு பிறகு மீண்டும் சீரியலில் நடிக்க வந்த பிரபல நடிகர்- அட இவரா, எந்த சீரியல் தெரியுமா?
சன் தொலைக்காட்சி தான் TRPயில் முதல் இடத்தில் உள்ளது. அதில் ஒளிபரப்பாகும் ரோஜா சீரியலில் ஹிட்டோ ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கிறது.
இந்த சீரியலை தாண்டி சன் டிவியில் புத்தம் புதிய சீரியல்கள் ஒளிபரப்பாக இருக்கிறது. அதில் ஒரு சீரியல் பற்றிய தகவல் ஏற்கெனவே வெளியாகிவிட்டது.
அதாவது திருகுமரன் இயக்கத்தில் சிங்கப்பெண்ணே என்ற சீரியல் தயாராகி வருகிறது. இதில் ஹரிப்பிரியா, கனிகா, டிடியின் அக்கா பிரியதர்ஷினி என பலர் நடிக்க இருக்கிறார்கள் என்பதை நாம் அறிவித்திருந்தோம்.
இப்போது சீரியல் குறித்து ஒரு புதிய தகவல், அது என்னவென்றால் ஆனந்தம் சீரியல் புகழ் கமலேஷ் பல வருடங்களுக்கு பிறகு மீண்டும் சீரியலில் நடிக்க தொடங்கியுள்ளார்.
படப்பிடிப்பு தளத்தில் அவர் எடுத்த புகைப்படமும் இன்ஸ்டாவில் வெளியாகியுள்ளது.