விபத்தில் சிக்கி உயிருக்கு போராடிய நடிகர் கார்த்தி.. சூர்யாவின் இந்த முடிவுக்கு இதுதான் காரணமா
சூர்யா - கார்த்தி
நடிகர் சிவகுமாரின் இரு மகன்களும் இன்று தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக உள்ளனர். சூர்யா - கார்த்தி இருவருக்கும் பல லட்சம் ரசிகர்கள் இருப்பதை நாம் அறிவோம்.
நடிகர் சூர்யா சினிமாவை தாண்டி, பலரும் பல உதவிகளை செய்து வருகிறார். சில விஷயங்கள் அதில் வெளியே தெரிந்தாலும் கூட, பல விஷயங்கள் தெரியாமல் போய்விடுகிறது. அப்படி நமக்கு இதுவரை தெரியாத, சூர்யா செய்த நல்ல விஷயத்தை பிரபல பாடார் க்ரிஷ் வெளிப்படையாக கூறியுள்ளார்.
உயிரை காப்பற்றிய சூர்யா
இதில் "சிங்கம் 3 படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு, நானும் சூர்யா அண்ணனும் ஒரே காரில் சென்றோம், அப்போது தெருவில் ஒருவர் விபத்தில் தலையில் பலத்த காயத்துடன் அடிபட்டு கிடந்தார். அவரை சுற்றி மக்கள் பலரும் நின்று கொண்டு இருந்தனர். ஆனால் உதவவில்லை.
உடனடியாக காரில் இருந்து இறங்கி, அடிபட்டு கிடந்தவரை தனது காரில் ஏற்றிக்கொண்டு, மருத்துவமனைக்கு அழைத்து சென்றார் சூர்யா. அவரை காப்பாற்ற முடிந்தது. நான் இப்படியொரு உதவியை செய்திருக்க மாட்டேன், யோசிப்பேன். ஆனால், சூர்யா அண்ணா செய்தார். எப்படி அண்ணா என்று அவரிடம் நான் கேட்டேன்".
உயிருக்கு போராடிய நடிகர் கார்த்தி
அதற்கு சூர்யா அளித்த பதில் "அப்படி நினைத்திருந்தால் என் தம்பி இன்று உயிருடன் இருந்திருக்க மாட்டான்" என்றார்.
"ஆம் சூர்யாவின் அண்ணாவின் தம்பி நடிகர் கார்த்தி, கல்லூரியில் படித்த வந்தபோது, அவருக்கு விபத்து ஒன்று ஏற்பட்டது. அந்த விபத்தில் கார்த்தியின் தலையில் அடிபட்டு தெருவில் கிடந்துள்ளார். அப்போது ஒருவர், இந்த பையனை பார்க்க சிவகுமார் மகன் போல் உள்ளதே, என உடனடியாக கார்த்தியை மருத்துவமனையில் அனுமதித்து, உயிரை காப்பாற்றியுள்ளார். அதனால் தான் இன்று கார்த்தி உயிருடன் இருக்கிறார்" என அவர் கூறியுள்ளார்.
இந்த தகவலை பாடகர் க்ரிஷ் சமீபத்திய பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகை விஜயலட்சுமிக்கு 7 முறை கருக்கலைப்பு; பணம் பெற்ற சீமான் - வெளியான நீதிமன்றம் தீர்ப்பு IBC Tamilnadu

குஞ்சுகளை வாய் வழியாக பெற்றெடுக்கும் உயிரினம் எது தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க! IBC Tamilnadu
