ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்த கார்த்தியின் சர்தார் 2 பட மாஸ் அப்டேட்.. வேற லெவல்
கார்த்தி
நடிகர் கார்த்தி, கடைசியாக பிரேம்குமார் இயக்கத்தில் மெய்யழகன் என்ற படத்தில் நடித்து நல்ல ஹிட் பார்த்தவர். கார்த்தி, பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் நடித்து கடந்த 2022ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சர்தார்.
இந்த படம் தண்ணீர் மாஃபியாவை மையப்படுத்தி எடுக்கப்பட்டது, இந்த படத்தில் கார்த்தி இரட்டை வேடங்களில் நடித்திருந்தார்.
பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.லக்ஷ்மன்குமார் தயாரிப்பில் உருவான இந்த படத்தில் கார்த்தியுடன், ராஷிகண்ணா, ரஜிஷா விஜயன் நாயகிகளாக நடித்திருந்தனர். சர்தார் படத்தின் முதல் பாக வெற்றியை தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகம் விறுவிறுப்பாக உருவாகி வருகிறது.
மாஸ் அப்டேட்
இந்நிலையில், சர்தார் 2 படம் குறித்து ஒரு அதிரடி அப்டேட் வெளியாகி உள்ளது. அதன்படி, இப்படத்தின் ஷூட்டிங் இன்று காலை வரை மைசூரில் நடைபெற்றது. பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டு விட்டதாகவும் கூறப்படுகிறது.
இருப்பினும் இந்த படத்தில் உள்ள பாடல் காட்சி என ஒரு சில காட்சிகள் பேங்காக் மற்றும் சென்னையில் படமாக்கப்பட உள்ளதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. இனிவரும் நாட்களில் இந்த படம் குறித்த அப்டேட்கள் தொடர்ந்து வெளிவரும் என எதிர்பாக்கப்படுகிறது.