வெற்றிப்பட இயக்குனருடன் கூட்டணி அமைத்துள்ள நடிகர் கார்த்தி... புகைப்படத்துடன் இதோ

By Yathrika Aug 03, 2026 11:46 AM GMT
Report

நடிகர் கார்த்தி

தமிழ் சினிமாவில் பிரபலத்தின் வாரிசாக களமிறங்கி இப்போது தனக்கென ஒரு தனி அடையாளத்தை உருவாக்கியவர் தான் நடிகர் கார்த்தி.

இவரது நடிப்பில் கடந்த 2022ம் ஆண்டு பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடித்த சர்தார் படம் மிகப்பெரிய வெற்றியடைய இப்போது 2ம் பாகம் தயாராகி வருகிறது. மாளவிகா மோகனன், எஸ்.ஜே.சூர்யா, யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த இப்படம் வரும் செப்டம்பர் மாதம் 10ம் தேதி திரைக்கு வரவுள்ளது.

இப்படத்தை தொடர்ந்து கார்த்தி மார்ஷல் படத்தின் நடிக்கிறார். பின் டாணாக்காரன் பட புகழ் தமிழ் இயக்கத்தில் கார்த்தி நடிக்க அப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைக்கிறார்.

கடல் பின்னணியில் நடக்கும் கேங்ஸ்டர் கதையில் உருவாக உள்ள இப்படத்தில் கல்யாணி பிரியதர்ஷன் நாயகியாக நடிக்க ஆதி பினிஷெட்டி வில்லனாக நடிக்கிறார்.

வெற்றிப்பட இயக்குனருடன் கூட்டணி அமைத்துள்ள நடிகர் கார்த்தி... புகைப்படத்துடன் இதோ | Actor Karthi New Film Announcement

புதிய படம்

நடிகர் கார்த்தி அடுத்தடுத்து படங்களில் பிஸியாக நடித்துவர இப்போது வெற்றிப்பட இயக்குனருடன் கூட்டணி அமைக்கிறார்.

அதாவது தனிஒருவன் பட புகழ் மோகன் ராஜாவின் இயக்கத்தில் கார்த்தி படம் நடிக்க கமிட்டாகியுள்ளாராம். இப்படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிக்கிறார்கள். 

வெற்றிப்பட இயக்குனருடன் கூட்டணி அமைத்துள்ள நடிகர் கார்த்தி... புகைப்படத்துடன் இதோ | Actor Karthi New Film Announcement

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US