மெய்யழகன் மாஸ் வெற்றி, நடிகர் கார்த்தியின் அடுத்த பட இயக்குனர் யார் தெரியுமா?
மெய்யழகன்
கார்த்தி மற்றும் அரவிந்த் சாமி நடிப்பில் பிரேம்குமார் இயக்கத்தில் அண்மையில் வெளியான திரைப்படம் மெய்யழகன்.
96 என்ற படத்தின் மூலம் காதலின் உணர்வுகளை காட்டிய பிரேம்குமார் அடுத்து உறவுகளின் அழகை காட்டி எடுத்துள்ள இந்த மெய்யழகன் படத்தை மக்கள் கொண்டாடி வருகிறார்கள்.

ரூ. 35 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் இதுவரை ரூ. 35 கோடிக்கு மேல் வசூல் வேட்டை செய்துள்ளதாக கூறப்படுகிறது.
அடுத்த படம்
மெய்யழகன் படம் மூலம் வெற்றியை கண்டுள்ள நடிகர் கார்த்தி அடுத்து யாருடைய இயக்கத்தில் நடிக்கப்போகிறார் என்று அவரது ரசிகர்கள் எதிர்ப்பார்த்து வந்தனர். இந்த நிலையில் அவரது அடுத்த பட இயக்குனர் குறித்து தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
அதாவது நடிகர் கார்த்தி, வாழை என்ற வெற்றிப்படத்தை கடைசியாக கொடுத்த மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்கப்போவதாக கூறப்படுகிறது.

இவர்கள் இணையும் படத்தை Prince Pictures தயாரிக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன, அதிகாரப்பூர்வ தகவல் வரும் வரை காத்திருப்போம்.
பிறந்தநாளில் முதல்வரை சிரிக்க வைத்த பிரேமலதா மற்றும் ஓபிஎஸ்... சட்டசபையில் நடந்தது என்ன? IBC Tamilnadu
என் இந்திய மனைவி, இந்த பாகிஸ்தானி., இவர்கள்தான் என் வாழ்க்கையின் இரண்டு முக்கியமான மனிதர்கள்: வான்ஸ் News Lankasri