மீண்டும் ஹிட் பட இயக்குனருடன் இணையும் நடிகர் கார்த்தி.... யார் தெரியுமா?

By Yathrika Apr 21, 2026 03:51 AM GMT
Report

நடிகர் கார்த்தி

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர்களில் நடிகர் கார்த்தியும் ஒருவர். இவர் தேர்வு செய்து நடிக்கும் படங்கள் அனைத்துமே ஒரே மாதிரியான கதைக்களத்தை கொண்டது இல்லை.

பருத்திவீரன் என்ற படத்தில் தனது சிறந்த நடிப்பை வெளிக்காட்டியவர் தனது நடிப்பு திறமையை காட்டும் வகையில் படங்கள் தேர்வு செய்து நடித்து அதில் சாதித்தும் வருகிறார்.

கடைசியாக கார்த்தி நடிப்பில் இந்த வருடம் வா வாத்தியார் திரைப்படம் வெளியாகி இருந்தது, படத்திற்கு நல்ல வரவேற்பு தான் கிடைத்தது. தற்போது சர்தார் 2, மார்ஷல், கைதி 2 என அடுத்தடுத்த படங்கள் கமிட்டாகி நடித்து வருகிறார்.

மீண்டும் ஹிட் பட இயக்குனருடன் இணையும் நடிகர் கார்த்தி.... யார் தெரியுமா? | Actor Karthi Reunites With Hit Movie Director

புதிய படம்

ஏற்கெனவே அடுத்தடுத்து படங்கள் கமிட்டாகி பிஸியாக நடித்துவரும் கார்த்தி இப்போது தனக்கு சூப்பர் ஹிட் படத்தை இயக்குனருடன் இணைய இருப்பதாக தகவல் வந்துள்ளது.

அவர் வேறுயாரும் இல்லை பாண்டிராஜுடன் தான் மீண்டும் இணைய உள்ளாராம், அப்படத்தை சூர்யா தயாரிக்க உள்ளார்களாம். தற்போது படத்தின் கதை விவாதிக்கும் வேலையில் தான் உள்ளதாம்.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US