2 நாள் முடிவில் நடிகர் கார்த்தியின் சர்தார் 2 திரைப்படம் செய்துள்ள மொத்த வசூல்...
சர்தார் 2
பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் கடந்த 2022ம் ஆண்டு வெளியான படம் சர்தார்.
இப்படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானது, பாக்ஸ் ஆபிஸிலும் கலக்கியது. முதல் பாக வெற்றியை தொடர்ந்து இரண்டாம் பாகம் தயாராகி கடந்த செப்டம்பர் 10ம் தேதி வெளியாகி இருந்தது.
இந்த இரண்டாவது பாகத்தில் கார்த்தியுடன் எஸ்.ஜே.சூர்யா, மாளவிகா மோகனன், ஆஷிகா ரங்கநாத், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

பாக்ஸ் ஆபிஸ்
சர்தார் 2 படத்திற்கான புரொமோஷன் எல்லாம் பக்காவாக நடந்தது, சூர்யா, கவின் என எல்லாம் சிறப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு படத்தை புரொமோட் செய்தார்கள்.
உலக அளவில் இரண்டு நாளில் இப்படம் ரூ. 9 கோடி வசூல் செய்திருப்பதாக தகவல்கள் வந்துள்ளன. இந்த வாரம் விடுமறை நாட்கள் வேறு அதிகம் இருப்பதால் கண்டிப்பாக படத்தின் வசூல் அதிகரிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.