கார்த்தியின் சர்தார் ஹிட்டடித்ததா, 3 நாளில் தமிழகத்தில் இவ்வளவு வசூலா?- முழு விவரம்
கார்த்தியின் சர்தார்
பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள சர்தார் திரைப்படம் தீபாவளி ஸ்பெஷலாக வெளியாகி இருந்தது. அப்பா-மகன் என இரு வேடங்களில் நடித்திருக்கும் கார்த்தி டிரைலரில் கூட கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு 16 கெட்டப்புகளில் நடித்துள்ளார்.
முக்கிய சமுதாய பிரச்சினையை கையில் எடுத்திருக்கும் இந்த திரைப்படத்தில் கார்த்தி ரகசிய உளவாளியாக நடித்துள்ளார். படம் வெளியாகி 3 நாட்கள் ஆகிவிட்டன, பொன்னியின் செல்வனை தொடர்ந்து மக்கள் கார்த்தியின் சர்தார் திரைப்படத்தை கொண்டாடி வருகிறார்கள்.
பட பாக்ஸ் ஆபிஸ்
கார்த்தியின் திரைப்பயணத்தில் ஹிட்டடித்த படங்களில் சர்தார் முக்கிய இடத்தை பிடித்துள்ளது. அதாவது படம் வெளியாகி 3 நாள் முடிவில் தமிழகத்தில் மட்டுமே ரூ. 14 கோடி வரை வசூலித்துள்ளதாம்.
விமர்சனங்களால் நல்ல ரீச் பெற்றிருக்கும் சர்தார் தீபாவளி விடுமுறைகளில் நல்ல வசூல் வேட்டை செய்யும் என்கின்றனர்.
நயன்தாராவுக்கு குழந்தை பெற்று தந்த வாடகை தாய் இவர் தானா! முதல்முறையாக வெளியான புகைப்படம்

வெளிநாட்டவர்களில் சிலரது பாஸ்போர்ட்களை ரத்து செய்யும் வகையில் சட்டத்தில் மாற்றங்கள்: ஜேர்மனி திட்டம் News Lankasri
