நடிகர் கருணாஸின் மகனை பார்த்திருக்கிறோம், அவரது மகளை பார்த்துள்ளீர்களா?- இதோ லேட்டஸ்ட் க்ளிக்
நடிகர் கருணாஸ் தமிழ் சினிமாவில் ஒரு காமெடியனாக வலம் வந்தவர். சின்ன சின்ன படங்களில் கொஞ்சம் நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள படங்களிலும் நடித்துள்ளார்.
படங்களில் நடித்து வந்தாலும் அவர் அரசியலில் அதிக ஈடுபாடு காட்டி வந்தார். அவரது மனைவி கிரேஸ் கருணாஸ் ஒரு பாடகி என்பது நாம் அனைவருக்குமே தெரிந்த விஷயம்.
இப்போது அவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டு வருகிறார். கருணாஸ்-கிரேஸ் ஆகியோருக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளார்.
மகன் கென் கருணாஸ் அண்மையில் தனுஷுடன் அசுரன் படத்தில் நடித்து பெரிய அங்கீகாரம் பெற்றார். இந்த நிலையில் நடிகர் கருணாஸ் மகளின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.
கருணாஸ் தனது குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் புகைப்படம் இதோ,