"சிம்புவுக்கு கொரோனா வந்தா தெரியும்" - நடிகர் சிம்புவின் கருத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த கருணாஸ்..!
தளபதி விஜய் நடிப்பில் மாஸ்டர் மற்றும் நடிகர் சிம்பு நடிப்பில் ஈஸ்வரன் என இரண்டு திரைப்படங்களும் 13 மற்றும் 14 அன்று வெளியாக உள்ளது.
மேலும் இந்த இரண்டு திரைப்படங்களும் 100% இருக்கைகளுடன் வெளியாக இருந்தது, ஆனால் நேற்று மத்திய அரசு தமிழகத்தில் 50% இருக்கைகளுடன் தான் அனுமதிக்க வேண்டும் அதிரடியாக உத்தரவிட்டது.
இந்நிலையில் சில தினங்களுக்கு சிம்பு 100% இருக்கைகளுக்கு அனுமதி அளிக்குமாறு அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார்.
இது குறித்து பேட்டி அளித்துள்ள கருணாஸ் "100 % ரசிகர்கள் திரையரங்கிற்கு வர வேண்டும் என நினைக்கும் சிம்பு, அவருக்கு கொரோனா வந்திருந்தால் அதன் பாதிப்பு தெரிந்திருக்கும் என கூறியுள்ளார்.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு முழுமையாக விலகாத நிலையில் திரையரங்குகளில் 100% இருக்கைகளுக்கு அனுமதி அளித்த உத்தரவை முதலமைச்சர் மறு பரிசீலனை செய்ய வேண்டும் என நடிகர் கருணாஸ் கூறியுள்ளார்.
Bigg Boss 10: கோபத்தில் இருந்த விஜய் சேதுபதியை கூலாக மாற்றிய போட்டியாளர்... அப்படியென்ன நடந்தது தெரியுமா? Manithan
சதம் விளாசிய கே.எல் ராகுல்; மேற்கிந்திய தீவுகளுக்கு 352 ஓட்டங்கள் இலக்கு நிர்ணயித்த இந்தியா News Lankasri