டாடா பட வெற்றியை தொடர்ந்து தரமான இயக்குனர்களுடன் கைகோர்த்த கவின்- இதோ லிஸ்ட்

By Yathrika Sep 27, 2023 03:20 PM GMT
Report

நடிகர் கவின்

சினிமா சாதிக்க வேண்டும் என சென்னை வரும் அனைவருக்குமே இந்த துறை வெற்றியை கொடுத்துவிடவில்லை. பல கஷ்டங்கள், உழைப்பை தாண்டி தான் சினிமாவில் எல்லா கலைஞராலும் சாதனை செய்ய முடிகிறது.

அப்படி சினிமா மீது உள்ள ஆசையால் சென்னை வந்தவர்களில் ஒருவர் தான் கவின். ஆரம்பத்தில் கிடைக்கும் குறும்படங்கள், சீரியல்கள் என நடித்த அவருக்கு பெரிய ரீச் கொடுத்தது சரவணன்-மீனாட்சி என்ற தொடர் தான்.

உதவி என்று கேட்பவர்களுக்கு மனதார உதவி செய்த நடிகர் விஜயகாந்த் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

உதவி என்று கேட்பவர்களுக்கு மனதார உதவி செய்த நடிகர் விஜயகாந்த் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

அதன்பிறகு படங்களில் நடிக்க தொடங்கிய அவர் பிக்பாஸ் கலந்துகொண்டு கொஞ்சம் தனது பெயரை கெடுத்துக் கொண்டார். அண்மையில் இவரது நடிப்பில் வெளியான டாடா திரைப்படம் கவினுக்கு நல்ல பெயரை கொடுத்துள்ளது.

இப்பட வெற்றி மகிழ்ச்சியோடு திருமணத்தையும் முடித்துக் கொண்டார்.

டாடா பட வெற்றியை தொடர்ந்து தரமான இயக்குனர்களுடன் கைகோர்த்த கவின்- இதோ லிஸ்ட் | Actor Kavin Next Films Director Details

அடுத்தடுத்த படங்கள்

இந்த நிலையில் நடிகர் கவினின் அடுத்தடுத்த படங்கள் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தற்போது நடன இயக்குனர் சதீஷ் படத்தில் நாயகனாக நடித்து வரும் கவின் அடுத்து விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார்.

இந்த படத்தை முடித்த கையோடு மாமன்னன் பட புகழ் மாரி செல்வராஜ் இயக்கத்திலும் ஒரு படம் நடிக்க இருக்கிறாராம்.

டாடா பட வெற்றியை தொடர்ந்து தரமான இயக்குனர்களுடன் கைகோர்த்த கவின்- இதோ லிஸ்ட் | Actor Kavin Next Films Director Details

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US