ஸ்டார் படம் மூலம் மாஸ் காட்டும் நடிகர் கவின்.. படத்தின் முழு வசூல் எவ்வளவு தெரியுமா?
நடிகர் கவின்
நடிகர் கவின், சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு சாதிக்க வந்த நடிகர்களில் ஒருவர்.
ஆரம்பத்தில் இருந்து சின்ன சின்ன பட வாய்ப்புகள் பெற்று வந்தவர் லிப்ட் படம் மூலம் கவனிக்கப்பட்டார். அப்படத்தை தொடர்ந்து டாடா என்ற படத்தில் நடித்தவருக்கு ரசிகர்கள் பேராதரவை பொழிந்தார்கள்.
அவரை சிறந்த நடிகராகவும் டாடா படம் காட்டியது. இப்பட வெற்றிக்கு பிறகு கவின் கூட்டணி அமைத்தது பியார் பிரேமா காதல் பட புகழ் இயக்குனர் இளன் உடன் தான்.
இளன் இயக்க, கவின் நடிக்க யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பில் ஸ்டார் திரைப்படம் தயாரானது.

பாக்ஸ் ஆபிஸ்
கவின் நடித்த ஸ்டார் திரைப்படம் கடந்த மே 10ம் தேதி வெளியான நிலையில் படம் நாளுக்கு நாள் நல்ல வசூல் வேட்டை நடத்தி வருகிறது.
படம் ரிலீஸ் ஆகி 3 நாள் முடிவில் ரூ. 15 கோடி வரை வசூலித்ததாக படக்குழு அறிவித்தார்கள். தற்போது மொத்தமாக 2 வார முடிவில் படம் ரூ. 21 கோடி வரை வசூலித்து ஹிட் லிஸ்டில் இடம்பெற்றுள்ளதாம்.

நடிகர் நெப்போலியன் வீட்டில் விசேஷம்! மகன் தனுஷ் - அக்ஷயா தம்பதிக்கு குவியும் வாழ்த்துக்கள் Manithan
128 ஆண்டுக்கு பின் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் - ஆனால் பாகிஸ்தான், இலங்கைக்கு வாய்ப்பில்லை News Lankasri