52 வயதிலும் பிட்டாக இருக்கும் கிச்சா சுதீப் சொன்ன டயட் பிளான்...
கிச்சா சுதீப்
கன்னட சினிமாவில் டாப் நடிகராக வலம் வருபவர்களில் ஒருவர் தான் கிச்சா சுதீப்.
தொடர்ந்து படங்கள் நடித்து வருபவர் தமிழில் இப்போது நடித்துள்ள திரைப்படம் மார்க். இப்படம் கிறிஸ்துமஸ் ஸ்பெஷலாக கடந்த 25ம் தேதி வெளியாகிவிட்டது. தமிழில் இதற்கு முன் நான் ஈ, புலி போன்ற படங்களில் நடித்துள்ளார்.

டயட் பிளான்
இப்பட புரொமோஷன் பேட்டி ஒன்றில் கிச்சா சுதீப் பேசும்போது தனது பிட்னஸ் காரணம் கூறியுள்ளார். ஒருநாளில் நான் இரண்டு வேளை மட்டுமே சாப்பிடுவேன்.
அதுவும் காலை 10.30 மணிக்கு ஒருமுறை, மாலை 6.30 க்கு ஒருமுறை சாப்பிடுவேன், அவ்வளவுதான். இதைத்தாண்டி எனக்கு பசியும் எடுக்காது. கடந்த 7, 8 வருடங்களாகவே இப்படித்தான் சாப்பிட்டு வருகிறேன்.
மிகவும் பிடித்தமான உணவென்றால், பிரௌன் ரைஸ் மற்றும் தால் (பருப்புக் குழம்பு).ராகி ரொட்டி, சாலட் போன்றவை அதிகம் எடுத்துக்கொள்வேன், காய்கறிகள் என்றாலே எனக்கு ஃபேவரைட்தான் என கூறியுள்ளார்.