வாய்ப்புகள் வழங்கிய விவேக், வளர்ச்சியை தடுக்கும் வடிவேலு - நகைச்சுவை நடிகர் கொட்டாச்சி பகிரங்க பேச்சு!!

By Kathick Jun 02, 2023 12:10 PM GMT
Report

நடிகர் கொட்டாச்சி

நாள் நட்சத்திரம் எனும் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் கொட்டாச்சி. இந்த படத்தில் அவரின் நகைச்சுவை கதாபாத்திரம் ஹிட்டானதால் அவருக்கு பட வாய்ப்புகள் குவிந்தன.

வாய்ப்புகள் வழங்கிய விவேக், வளர்ச்சியை தடுக்கும் வடிவேலு - நகைச்சுவை நடிகர் கொட்டாச்சி பகிரங்க பேச்சு!! | Actor Kottachi About Vadivelu And Vivek

அதன் பின்னர் தமிழ் சினிமாவில் ஒரு முக்கிய நகைச்சுவை நடிகராக இருந்து வருகிறார் கொட்டாச்சி. இவர் திரைப்படங்களில் வடிவேலு, விவேக் போன்ற நகைச்சுவை கலைஞர்களுடன் இணைந்து நடித்துள்ளார். அதில் அவர்களுக்கு இணையாக தன்னுடைய நகைச்சுவையை வெளிப்படுத்தியிருப்பார்.

இவர் பேட்டி ஒன்றில் நகைச்சுவை நடிகர் வடிவேலு மற்றும் விவேக் பற்றி பல தகவல்களை கூறியிருக்கிறார்.

அவர் கூறியது

அதில், "நான் நடிகனாக திரைத்துறையில் அறிமுகமாகி பல பட வாய்ப்புகளை இழந்துள்ளேன். இதற்கு நகைச்சுவை வடிவேலு அவர்கள் தான் காரணம். ஏனென்றால் நடிகர் வடிவேலு நகைச்சுவையில் தன்னை விட யாரும் அதிகம் ஸ்கோர் செய்துவிடக் கூடாது என்பதில் தெளிவாக இருப்பார்".

"இதற்கு உதாரணம் "தவசி" படத்தின் படப்பிடிப்பு தளத்தில் என்னுடைய நடிப்பு திறமையை பார்த்து அவர் கேமரா முன் சென்று மறைத்து எனக்கு பல்வேறு தடங்கல் செய்தார். இதன் காரணமாக அந்த படத்தில் நடிக்காமல் நான் விலகிவிட்டேன்".

வாய்ப்புகள் வழங்கிய விவேக், வளர்ச்சியை தடுக்கும் வடிவேலு - நகைச்சுவை நடிகர் கொட்டாச்சி பகிரங்க பேச்சு!! | Actor Kottachi About Vadivelu And Vivek

"மேலும் நான் நடிப்பதாக இருந்த பல படங்களில் அவர் நடித்து என்னுடைய வளர்ச்சியை தடுத்தார். இந்த சூழலில் எனக்கு நடிகர் விவேக் அவர்கள் பெருமளவில் உதவி செய்திருந்தார். மேலும், எனக்கென பல படவாய்ப்புகளை தேடி கொடுத்தார்".

"விவேக் அவர்கள் தன்னுடன் இருப்பவர்களை தூக்கிவிட வேண்டும் என்று நினைப்பவர். ஆனால் வடிவேலு அவர்கள் உடனிருப்பவர்கள் வளர்ச்சியை தடுக்க நினைப்பவர். அதனால் அவருடன் இருப்பவர்களே அவரை கழுவி ஊற்றுவார்கள்" என பேட்டி ஒன்றில் பகிரங்கமாக தெரிவித்துள்ளார்.

வீரன் திரைவிமர்சனம்

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US