வாய், மூக்கில் ரத்தம் வழிய மாரடைப்பால் உயிரிழந்த பிரபல நடிகர்- சோகத்தின் உச்சம்
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் அருகே அல்லி நாயக்கன்பாலையம் என்னும் பகுதி உள்ளது. அந்த பகுதியை சேர்ந்த தனசேகரன் என்கிற லிட்டில் ஜான் திரைப்படங்களில் நடித்துள்ளார்.
நகைச்சுவை நடிகர்
சுமார் மூன்று அடி மட்டுமே உயரம் கொண்ட லிட்டில் ஜான் வெங்காயம், ஐம்புலன் போன்ற படங்களில் மட்டும் நடித்துள்ளார். பின் பட வாய்ப்புகள் இல்லாததால் கிராமங்கள் சென்று கோவில் திருவிழாக்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்குபெற்று வந்திருக்கிறார்.

மாரடைப்பு
அப்படி நேற்று முன்தினம் இரவு ஒரு மாரியம்மன் கோவில் திருவிழா முடித்துவிட்டு வீட்டிற்கு வந்த அவர் நல்லபடியாக பேசிவிட்டு உறங்கியுள்ளார்.
அடுத்த நாள் காலையில் அவர் நீண்ட நேரம் ஆகியும் எழும்பாததால் உறவினர்கள் அருகில் சென்று பார்த்துள்ளனர்.
அப்போது அவர் வாய் மற்றும் மூக்கில் ரத்தம் வழிய மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளது தெரிய வந்துள்ளது.