ரூ. 1000 கோடி பட்ஜெட் படத்தில் இணைந்துள்ள நடிகர் மாதவன்... செம கூட்டணி
மாதவன்
நடிகர் மாதவன், சாக்லெட் பாயாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி இப்போது சிறந்த நடிகராக தன்னை நிரூபித்து வருகிறார்.
இடையில் கேப் விட்டவர் பின் இறுதிச்சுற்று மூலம் தனது புதிய இன்னிங்ஸை தொடங்கியது போல் மாஸ் காட்டி வருகிறார். அடுத்தடுத்து ஹிட் படங்கள் கொடுத்து வருபவர் கடைசியாக டெஸ்ட் என்ற வெப் தொடரில் நடித்திருந்தார்.
புதிய படம்
தற்போது நடிகர் மாதவன் ரூ. 1000 கோடி பட்ஜெட் படத்தில் நடிக்க இணைந்துள்ளதாக தகவல் வந்துள்ளது. அதாவது ஆர்ஆர்ஆர் படத்திற்கு பிறகு எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் மகேஷ் பாபு-பிரியங்கா சோப்ரா நடிக்க ஒரு புதிய படம் தயாராகி வருகிறது.
ரூ. 1000 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இப்படத்தில் ப்ருத்விராஜும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க தற்போது மாதவன் இப்படத்தில் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்தப் படம், ‘இண்டியானா ஜோன்ஸ்’ போல உலக அளவிலான ஆக்ஷன் அட்வென்சர் படமாக இருக்கும்’ என்று ராஜமௌலி ஏற்கெனவே தெரிவித்திருந்தார்.

படுக்கையில் நெப்போலியன் மகன்... எலும்பும் தோலுமாக மாறியதற்கு என்ன காரணம்? நேரில் சந்தித்த பிரபலம் Manithan
