லோகேஷின் பென்ஸ் திரைப்படத்தில் இணையும் முன்னணி நடிகர்.. மாஸ் அப்டேட் இதோ
லோகேஷ் கனகராஜ்
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக மாறியுள்ளார் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கத்தில் அடுத்ததாக கூலி திரைப்படம் உருவாகி வருகிறது.
இயக்குனராக மட்டுமின்றி தயாரிப்பாளராகவும் சினிமாவில் களமிறங்கியுள்ளார் லோகேஷ் கனகராஜ். இவர் தயாரிப்பில் அடுத்ததாக பென்ஸ் திரைப்படம் உருவாகி வருகிறது.
பாக்யராஜ் கண்ணன் இயக்கும் இப்படத்தில் ராகவா லாரன்ஸ் ஹீரோவாக நடித்து வருகிறார். ஏற்கனவே இப்படத்தில் இருந்து டைட்டில் போஸ்டர் வெளிவந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
தயாரிப்பாளராகவும், இயக்குனராகவும் தமிழ் சினிமாவில் ஜொலித்து கொண்டிருக்கும் லோகேஷின் எல்சியூ திரைப்படமாக பென்ஸ் அமையும் என அறிவிக்கப்பட்டது.
மாஸ் அப்டேட்
இந்நிலையில், இப்படம் குறித்து ஒரு மாஸ் அப்டேட் வெளியாகி உள்ளது.
அதாவது, இந்த படம் முழுக்க ஆக்க்ஷன் கதைக்களத்தில் உருவாக உள்ள நிலையில், வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க நடிகர் மாதவனை ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர்கள் இருவரும் இணைந்து ஒன்றாக நடிக்க இருப்பதால் ரசிகர்களுக்கு படத்தின் மீது எதிர்பார்ப்பு எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நான் பிரபுதேவாவின் ரசிகை; அதுக்காக இதை ஏற்க முடியாது - நடிகை சிருஷ்டி டாங்கே பகீர் புகார் IBC Tamilnadu

பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு பிரித்தானியாவுக்குள் அனுமதி? எதிர்க்கட்சியினர் எச்சரிக்கை News Lankasri
