மீண்டும் இயக்குநர் அவதாரம் எடுக்கும் நடிகர் மணிகண்டன்.. வெறித்தனமான அப்டேட்
மணிகண்டன்
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் மணிகண்டன். இவர் விக்ரம் வேதா, காதலும் கடந்துபோகும் போன்ற படங்களில் துணை கதாபாத்திரத்தில் தோன்றி, பின் ஜெய் பீம் படத்தில் முக்கிய ரோலில் நடித்து ரசிகர்களிடையே பிரபலமானார்.
அதன் பின், இவர் கதாநாயகனாக நடித்து வெளிவந்த குட் நைட், லவ்வர் படங்கள் வெற்றிபெற்ற நிலையில், சமீபத்தில் வெளியான குடும்பஸ்தன் படமும் மாபெரும் அளவில் வெற்றியடைந்துள்ளது.

நடிகராக மட்டுமின்றி இயக்குநராகவும் மணிகண்டன் சினிமாவில் வலம் வந்தார். இவர் 'நரை எழுதும் சுயசரிதை' என்ற படத்தை இயக்கி இருந்தார். இப்படத்தில் டெல்லி கணேஷும் இவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
வெறித்தனமான அப்டேட்
இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று கொடுத்தது. இந்நிலையில், தற்போது மீண்டும் மணிகண்டன் இயக்குநர் அவதாரம் எடுக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இது தொடர்பாக இயக்குநர் காயத்ரி உறுதிபடுத்தியுள்ளார். அதாவது, மணிகண்டன் ஒரு புதிய படத்திற்கான கதையை தயாராக வைத்துள்ளதாகவும், அதனை அவரே இயக்கி நடிக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என்று எதிர்பாக்கப்படுகிறது.
ஸ்பெயினில் இருந்து மொராக்கோவிற்கு திரும்பிய 37,500 அகதிகள்: பலி எண்ணிக்கை 57 ஆக அதிகரிப்பு News Lankasri
ஐரோப்பாவை பதறவைத்த புலம்பெயர்தல்... மொராக்கோ நாட்டவர்கள் மீண்டும் நாடு திரும்பியது ஏன்? News Lankasri