மறைந்த நடிகர் மணிவண்ணனின் வாழ்க்கை வரலாறு!.. இதோ
நடிகர் மணிவண்ணன்
நடிகர் மணிவண்ணன் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சூலூர் என்ற கிராமத்தில் கடந்த 31-ம் தேதி, 1954 -ம் ஆண்டு பிறந்தார். இவருக்கு பெற்றோர் மணிவண்ணன் ராஜகோபால் என்று தான் பெயர் வைத்தனர். மணிவண்ணனுக்கு மூன்று சகோதரிகள் உள்ளனர்.
படிப்பு
மணிவண்ணன் கோவை அரசு கலைக் கல்லூரியில் பி.யூ.சி படித்தார். அப்போது அவருக்கு அறிமுகமானவர் தான் நடிகர் சத்யராஜ். இவர் கல்லூரியில் படிக்கும் போதே நாடகங்களில் நடித்துள்ளார்.
சினிமா வாழ்க்கை
பாரதிராஜா இயக்கத்தில் கடந்த 1979 -ம் ஆண்டு வெளியான கல்லுக்குள் ஈரம் என்ற படத்தில் மணிவண்ணன் அவருக்கு உதவியாளராக சேர்த்துக் கொண்டார்.
இப்படத்தை தொடர்ந்து நிழல்கள், டிக் டிக் டிக், காதல் ஓவியம், அலைகள் ஓய்வதில்லை போன்ற படங்களில் கதாசிரியராகவும், வசனகர்த்தாவாகவும் பணிபுரிந்திருக்கிறார்.
இதையடுத்து கடந்த 1988 -ம் ஆண்டு கொடிப் பறக்குது படத்தில் வில்லனாக நடித்து திரையில் தோன்றினார். மணிவண்ணன் இயக்கி நடித்திருந்த அமைதிப்படை படம் மாபெரும் வெற்றி பெற்றது. தொடர்ந்து 400க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
அரசியல் வாழ்க்கை
கடந்த 2006 -ம் ஆண்டு ம.தி.மு.க அரசியல் கட்சியில் சேர்ந்தார். அந்த கட்சிக்கு ஆதரவாகப் பிரச்சாரமும் மேற்கொண்டார்.
குடும்பம்
நடிகர் மணிவண்ணன் செங்கமலம் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஜோதி என்ற மகளும், ரகுவண்ணன் என்ற மகனும் உள்ளனர்.
இறப்பு
மணிவண்ணன் தனது 58 வயதில் மாரடைப்பால் காலமானார். அவரது விருப்பப்படி, அவரது உடலை தமிழ் ஈழக் கொடியால் மூடப்பட்டு அடக்கம் செய்யப்பட்டார்.