நடிகர் மனோபாலா திடீர் மரணம்! கடும் அதிர்ச்சியில் ரசிகர்கள்
மனோபாலா
இயக்குனரும் காமெடி நடிகருமான மனோபாலா இன்று சற்று முன் திடீரென மரணமடைந்து இருக்கிறார். அவரது வயது 69. உடல்நல குறைவால் அவர் மரணம் அடைந்தது சினிமா துறையினர் மற்றும் ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடிகர் மனோபாலா சென்னையில் இருக்கும் பிரபல தனியார் மருத்துவமனையில் angio சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவர் சிகிச்சையில் இருக்கும் புகைப்படங்களும் வெளியாகி இருந்தது.
கல்லீரல் பிரச்சனைக்காக சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று சென்னை வடபழனியில் இருக்கும் அவரது வீட்டில் மரணமடைந்து இருக்கிறார்.
இயக்குனர், நடிகர், தயாரிப்பாளர்
பாரதிராஜாவின் துணை இயக்குனராக பணியாற்றி அனுபவம் பெற்று அதன் பின் 40கும் மேற்பட்ட படங்களை இயக்கி இருக்கிறார் மனோபாலா. ரஜினியின் ஊர்காவலன் உள்ளிட்ட பல படங்களை அவர் இயக்கி இருக்கிறார்.
அதன் பின் நடிகராக எக்கச்சக்க படங்களில் நடித்து இருக்கிறார் அவர். 'எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்' என நடிகர் விவேக் உடன் சேர்ந்து நடித்த காமெடி மிகப்பெரிய ஹிட் ஆனது. அதற்கு பிறகு பல படங்களில் அவரது ஒல்லி லுக்கை கலாய்க்கும் விதமாகவே பல்வேறு காமெடிகள் இருக்கும்.
மேலும் தயாரிப்பாளராகவும் களமிறங்கி ஹெச் வினோத்தின் சதுரங்க வேட்டை உள்ளிட்ட படங்களை தயாரித்து இருக்கிறார் மனோபாலா.
மனோபாலாவுக்கு இரங்கல் தெரிவித்து ரஜினி ட்விட்டரில் பதிவிட்டு இருக்கிறார். ”பிரபல இயக்குநரும், நடிகருமான, அருமை நண்பர் மனோபாலாவுடைய இறப்பு எனக்கு மிகவும் வேதனை அளிக்கிறது. அவருடைய குடும்பத்தினருக்கு என்னுடைய அனுதாபங்கள். அவரது ஆத்மா சாந்தியடையட்டும்.” என அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.
பிரபல இயக்குநரும், நடிகருமான, அருமை நண்பர் மனோபாலாவுடைய இறப்பு எனக்கு மிகவும் வேதனை அளிக்கிறது. அவருடைய குடும்பத்தினருக்கு என்னுடைய அனுதாபங்கள். அவரது ஆத்மா சாந்தியடையட்டும்.@manobalam
— Rajinikanth (@rajinikanth) May 3, 2023
Also Read: வாழ்க்கையை முடிச்சிக்கிற Stage-கு தள்ளிட்டாங்க: நடிகர் சாந்தனு எமோஷ்னல்