ட்விட்டரை விட்டே போய்ட்டாரா? தளபதி 67 ட்வீட்டால் மனோ பாலாவிற்கு வந்த சோதனை

By Dhiviyarajan Jan 03, 2023 04:00 PM GMT
Report

தளபதி 67

பிரபல நடிகரும், இயக்குனருமான மனோபாலா சமீபத்தில் செய்த ட்வீட் படுவைரல் ஆனது.

விஜய்யின் வாரிசு திரைப்படம் வருகிற பொங்களுக்கு வெளியாகும் நிலையில் படத்தின் ப்ரோமோஷன் வேலைகள் தீவிரமாக நடந்து வருகிறது. இப்படத்தை அடுத்து விஜய் நடிக்கவுள்ள தளபதி 67 படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார். இப்படம் LCU-வில் வருவதால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டு இருக்கிறார்கள்.

தளபதி 67 படத்தில் விஜய் ஜோடியாக த்ரிஷா நடிக்கவுள்ளதாக தகவல் வெளியானது. ஆனால் அதிகாரப்பூர்வமாக அறிக்கை வெளியிடவில்லை.

ட்விட்டரை விட்டே போய்ட்டாரா? தளபதி 67 ட்வீட்டால் மனோ பாலாவிற்கு வந்த சோதனை | Actor Manobala Repalyed To Controversy

ட்வீட் சர்ச்சை

இந்நிலையில் இயக்குனரும், நடிகருமான மனோபாலா சமீபத்தில் தளபதி 67 படத்தை பற்றி அப்டேட் கொடுத்திருந்தார். அதில், "தளபதி 67 படம் முதல் நாள் ஷூட்டிங் மிக சிறப்பாக இருந்தது. நான் விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜை சந்தித்தேன். முதல் நாளே நன்றாக இருந்தது" என்று கூறியிருந்தார்.

இந்த ட்வீட் வேகமாக இணையத்தில் பரவியது. அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் முன்பே அவர் இந்த பதிவை வெளியிட்டதால், அதற்கு பிறகு டெலீட் செய்து விட்டார் மனோபாலா. மேலும் அவர்" நான் பதிவிட்ட ட்வீட்டை நீக்கிவிட்டேன்.. என்னை மன்னித்து விடுங்கள்" என்று கூறினார்.

ட்விட்டரை விட்டே போய்ட்டாரா? தளபதி 67 ட்வீட்டால் மனோ பாலாவிற்கு வந்த சோதனை | Actor Manobala Repalyed To Controversy

இருப்பினும் விஜய் ரசிகர்கள் அவரை மோசமாக ட்ரோல் செய்தனர். இதனால் மீண்டும் மனோபாலா ட்வீட் செய்துள்ளார். அதில் " எனக்கு யாரோ ஒருவர் போன் செய்து, என்னிடம் ட்விட்டரில் இருந்து சென்று விட்டீர்களா? என்று கேட்டார். இல்லை நான் ட்விட்டரில் இருக்கிறேன்" என்று கூறியதாக தெரிவித்து இருக்கிறார்.

அதிரடியாக வந்தது விஜய்யின் வாரிசு பட டிரைலர் அப்டேட்- எப்போது ரிலீஸ் தெரியுமா?

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US