நிறைவேறாமல் போன மனோஜ் பாரதிராஜாவின் கடைசி ஆசை.. என்ன பாருங்க!
மனோஜ் பாரதிராஜா
பாரதிராஜா 16 வயதினிலே படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர். முதல் படத்திலேயே மிகப்பெரிய வெற்றியை கண்டார்.
இப்படத்தை தொடர்ந்து கிழக்கே போகும் ரயில், சிகப்பு ரோஜாக்கள், புதிய வார்ப்புகள், நிறம் மாறாத பூக்கள், கல்லுக்குள் ஈரம், அலைகள் ஓய்வதில்லை, டிக் டிக் டிக் போன்ற படங்கள் எல்லாம் செம ஹிட்.
பல நடிகர்களின் சினிமா பயணத்தை வெற்றிகரமாக்கிய பாரதிராஜா 1999ம் ஆண்டு தன்னுடைய மகனை கதாநாயகனாக அறிமுகப்படுத்திய படம் தாஜ்மஹால்.
அவரது மகன் மனோஜ் பாரதிராஜா சில படங்களில் ஹீரோவாக நடித்த நிலையில் தற்போது குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்தார்.
கடைசி ஆசை
இந்நிலையில் தற்போது மனோஜ் பாரதிராஜா திடீர் மாரடைப்பு காரணமாக நேற்று மரணம் அடைந்து இருக்கிறார். ரசிகர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழ் சினிமா துறையையும் இந்த தகவலால் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.
இந்நிலையில், மனோஜ் கடைசி ஆசை குறித்து தகவல் வெளியாகி உள்ளது. அது என்னவென்றால் சிகப்பு ரோஜாக்கள் படத்தின் அடுத்த பாகத்தை சிம்பு மற்றும் ஸ்ருதிஹாசனை வைத்து எடுக்க வேண்டும் என பல ஆண்டுகளாக போராடி உள்ளார். ஆனால், கடைசி வரை அந்த ஆசை நிறைவேறாமல் போய் உள்ளது.