எனக்கு எயிட்ஸ் நோய் என செய்தி பரப்பிட்டாங்க.. 80ஸ் நடிகர் மோகன் வேதனை
நடிகர் மோகன் 80களில் தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருந்தவர். தற்போதைய 2கே கிட்ஸுக்கு அவர் அதிகம் பரிட்சயம் இல்லாதவர் தான்.
தற்போது சினிமாவில் ரீஎன்ட்ரி கொடுத்து இருக்கும் மோகன் ஹரா என்ற படத்தில் நடித்து இருக்கிறார். அது விரைவில் ரிலீஸ் ஆகிறது. அடுத்து தளபதி விஜய்யின் GOAT படத்தில் மோகன் ஒரு ரோலில் நடித்து வருகிறார்.
வதந்தி பற்றி வேதனை
நடிகர் மோகன் தான் சினிமாவில் இருந்து விலகி இருந்த காலகட்டத்தில் பல்வேறு வதந்திகள் வந்தது எனவும், அவை தன்னை அதிகம் வேதனை படுத்தியது என்றும் கூறி இருக்கிறார்.
எனக்கு எயிட்ஸ் நோய் வந்துவிட்டது என செய்தி பரப்பி விட்டார்கள். அதை எனக்கும், குடும்பத்தினர், நபர்களுக்கு பெரிய வேதனை கொடுத்தது.
என்னிடம் வந்து பேட்டி எடுப்பவர்கள் 'எயிட்ஸ் இல்லை' என சொல்லுங்க என கேட்பார்கள். நீங்களே எதையோ எழுதிடுவீங்க, அது இல்லை என நான் விளக்கம் சொல்லனுமா என கோபமாக கேட்டாராம் மோகன்.

ஜேர்மன் பொதுத் தேர்தல் முடிவுகள் SPD கட்சியினருக்கு கசப்பானது! பிரெடெரிக் மாட்ஸுக்கு சேன்சலர் ஸ்கோல்ஸ் வாழ்த்து News Lankasri
