80களில் ரசிகைகளின் பேவரெட் நடிகர் மோகனின் பிறந்தநாள் கொண்டாட்டம்- இப்போது எப்படி உள்ளார் பாருங்க
நடிகர் மோகன்
80களில் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் திரைப்படங்கள் நடித்து இப்போதும் மக்கள் மனதில் நிலைத்து நிற்பவர் நடிகர் மோகன்.
1977ம் ஆண்டு கோகிலா என்ற கன்னட திரைப்படத்தின் மூலம் நடிக்க ஆரம்பித்த இவர் தொடர்ந்து தமிழில் அதிகம் நடிக்க ஆரம்பித்தார். 1980ம் ஆண்டு மூடு பணி என்ற திரைப்படத்தில் முதன்முறையாக நடித்தார்.
அதன்பிறகு அவரது பயணம் வெற்றிகரமாகவே இருந்தது. நிறைய படங்களில் பாடகராக அவர் கலக்க ஒரு காலத்தில் மைக் மோகன் என்று பிரபலமாக அழைக்கப்பட்டார். இடையில் சில வதந்திகள், பிரச்சனைகளில் சிக்கியதால் இவரது சினிமா பயணம் அப்படியே முடிந்தது.
நீண்ட இடைவேளைக்கு பிறகு படம் நடித்தார் ஆனால் சரியான வரவேற்பு பெறவில்லை. இந்த நிலையில் நடிகர் மோகன் தனது பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடியுள்ளார்.
அவரது பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ராஜா ராணி சீரியல் புகழ் நடிகர் சைவம் ரவி கலந்துகொண்டிருக்கிறார்.
அப்போது மோகனுடன் எடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார், அதைப்பார்த்த ரசிகர்கள் அட மைக் மோகனா இது எப்படி உள்ளார் என சந்தோஷமாக புகைப்படத்திற்கு லைக்ஸ் குவித்து வருகிறார்கள்.
சஞ்சீவ் மீது காதல் மலர்ந்தது எப்படி, முதன்முறையாக ஓபனாக கூறிய சீரியல் நடிகை ஆல்யா மானசா

மறுமணத்தை மறுத்த பாக்கியா- அசிங்கப்பட்டு வெளியேறிய ஈஸ்வரி.. பதில் கேள்வி எழுப்பும் குடும்பத்தினர் Manithan
