பிரபல நடிகர் மௌலி அவர்களின் வாழ்க்கை வரலாறு
நடிகர் மௌலி
திருவிடைமருதூர் சாம்பமூர்த்தி கணபதி பாலகிருட்டிண சாசுதிரிகள் மௌலி என்பது அவரது முழு பெயர்.
இயக்குனர், நடிகர், திரைக்கதை ஆசிரியர் என பன்முகம் கொண்ட இவர் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் படங்கள் இயக்கியும் நடித்தும் உள்ளார்.
கமல்ஹாசன்-சிம்ரன் நடிப்பில் செம ஹிட்டான பம்மல் கே.சம்பந்தம் திரைப்படமும், மாதவன் நடித்த நளதமயந்தி திரைப்படமும் இவர் இயக்கிய வெற்றிப் திரைப்படங்களில் சிலவாகும்.
கடைசியாக Maara என்ற வெப் தொடரில் நடித்து முடித்துள்ளார், திரையரங்கில் அவரது நடிப்பில் வெளியான படம் என்றால் அது நயன்தாரா நடிப்பில் வெளியான மூக்குத்தி அம்மன் படம் தான்.
விருதுகள்
4000 Stage Shows செய்துள்ளார், சிறந்த எழுத்தாளர் என்பவதற்காக கலைமாமணி விருதும், 5 நந்தி விருதுகளையும் பெற்றுள்ளார்.
100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவர் சீரியல்களிலும் நடித்துள்ளார்.
சின்னத்திரை
மௌலி 1997ல் நிம்மதி உங்கள் சாய்ஸ், 2008ம் ஆண்டு கோலங்கள், கலசம், 2010 நாதஸ்வரம், 2015 குல தெய்வம், 2018 கல்யாண வீடு போன்ற சன் தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார்.
2020ல் அன்பே வா என்ற தொடரில் நடிக்க ஆரம்பித்துள்ளார்.
குடும்பம்
திருமணம் செய்த மௌலி அவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். இவரது மகள் ஷ்ரவந்தி ஒரு கர்நாடக பாகியாவார். மௌலி சகோதரும் சினிமாவில் தான் உள்ளார்.
டப்பிங்
35 படங்களுக்கு மேல் தமிழ், தெலுங்கு என இயக்கியுள்ள மௌலி நன்றி, மீண்டும் வருக மற்றும் ஒரு வாரிசு உருவாகிறது என்ற படங்களில் நடித்த பிரதாப் போத்தனிற்காக டப்பிங் பேசியுள்ளார்.