நடிகர் முத்துக்காளையின் மனைவி சிகிச்சை பலன் இன்றி உயிரிழப்பு...

By Yathrika May 18, 2026 08:20 AM GMT
Report

முத்துக்காளை

தனது வாழ்க்கையில் 18 வயதில் கராத்தேவில் பிளாக் பெல்ட் வாங்கி அப்படியே சினிமாவில் ஸ்டண்ட் மாஸ்டராக பணியாற்றத் தொடங்கியவர் தான் நடிகர் முத்துக்காளை.

இடையில் கல்வியை தொடர முடியாமல் போனது. பின்னர் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து வந்தவர் அவர் மட்டுமே இடம்பெறும் சில காமெடி காட்சிகள் மக்களிடம் ஹிட்டாகி வந்தது.

படிக்கும் காலத்தில் படிப்பை தொடர முடியாத முத்துக்காளை கடந்த சில வருடங்களாக கல்வியில் கவனம் செலுத்த ஆரம்பித்தார், தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் பட்டப் படிப்பு படிக்க ஆரம்பித்தார்.

நடிகர் முத்துக்காளையின் மனைவி சிகிச்சை பலன் இன்றி உயிரிழப்பு... | Actor Muthu Kaalai Wife Passed Away

மறைவு

சில தினங்களுக்கு முன்னர் தனது மனைவியைக் காப்பாற்ற வேண்டும் என தமிழ்நாடு முதல்வர் விஜய்க்கு நடிகர் முத்துக்காளை உருக்கமான வேண்டுகோள் விடுத்தார். உடனே அவருக்கு அரசு தரப்பில் இருந்து அதிகாரிகள் சந்தித்து உதவி செய்வதாக கூறியிருந்தனர்.

முத்துக்காளை மனைவி மாலதியின் தலையில் ஏற்பட்ட ரத்தக்கசிவு காரணமாக ஆபரேஷன் நடந்துள்ளது. ஆபரேஷன் முடிந்த பிறகு கடந்த 17 நாட்களாக நுரையீரல் தொற்று காரணமாக அவரது உடல்நிலை மிகவும் மோசமாகி வந்துள்ளது.

நடிகர் முத்துக்காளையின் மனைவி சிகிச்சை பலன் இன்றி உயிரிழப்பு... | Actor Muthu Kaalai Wife Passed Away

இந்த நிலையில் முத்துக்காளை மனைவி மாலதி சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்துள்ளார்.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US